ஜி7 மாநாட்டில் காணொளியில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற முழக்கத்தை முன்வைத்தார். இன்று நடைபெறும் இறுதிநாள் மாநாட்டில் பிரதமர் 2 அமர்வுகளில் உரையாற்ற இருக்கிறார்.

காணொளி முறையில் நடைபெறும் ஜி7 நாடுகளின் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இந்தியா பங்கேற்றுள்ளது. அதில் வலிமையான ஆரோக்கிய கட்டமைப்புகள் என்ற தலைப்பில் நேற்று அமர்வு நடந்தது. கொரோனா வைரசின் பாதிப்பில் இருந்து மீள்வதுடன் எதிர்கால ஆரோக்கியத்தை வலிமைப்படுத்துவது குறித்து மாநாட்டில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

அதில் பேசிய பிரதமர் மோடி, கொரோனாவை ஒழிக்க உலகளாவிய ஒத்துழைப்புடன் போராட வேண்டும் என்றும் அரசுகளின் அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் பேசினார். சுகாதாரத் துறையில் ஒரே பூமி ஒரே ஆரோக்கியம் என்ற நிலையை எட்ட வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.