பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

“எதிர்காலம் இறந்த காலத்தால் பக்குவமடைகிறது.”

வழக்கமாய் சம்மர் லீவில் சம்மர் கட் அடிச்சிட்டு ஊட்டி போய்ட்டு இருந்தவங்களை.. வீட்டில் உட்கார வச்சிடுச்சு கொரோனா. ஒவ்வொரு வருசமும் வேடந்தாங்கல் பறவை போல் சீசனுக்கு மறக்காமல் வந்துவிடுகிறது கொரோனாவும் லாக்டெளனும். பாட்டி சொல்லை தட்டாதே என்பது போய் இப்போது டாக்டர் சொல்லை தட்டக்கூடாது என்றாகிவிட்டது. அடுத்த மூன்றாம் அலை லாக்டெளனில் உயிரிழப்பு இருக்கக் கூடாது என வேண்டிக்கொண்டு அடுத்த லாக்டெளனில் என்னென்ன தொடர்ந்து செய்து கொண்டிருப்போம்னு ஒரு பார்வை.

Representational image

*வெயில் காலத்துக்கு மட்டும் வருவதால் மாரியம்மனை மறந்துவிட்டு கொரோனா அம்மனை வழிபடுவோம்.

*பூமாரி, தேன்மாரி கொரோனா ஒரு உருமாறினு பானபத்திர ஓணாண்டி மாதிரி கவிதையில் வாசிப்போம்.

*எல்லா மருந்தும் போட்டு ஓயாமல் நோய் வருவதால்.. Lab ல் கொரோனாவை மூட்டைப் பூச்சி மருந்து வச்சு கொல்ல ப்ளான் போடுவோம்.

*சமையல் எரிவாயு வாகனத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்றி வரலாம்.

*வெப் சீரியஸ் எல்லாம் கொரோனா வார்டில் கொலை, ஆக்சிஜன் அலையில் ஆறுமுகம்னு மைய கருவை மையப்படுத்தி த்ரில் ஸ்டோரி எடுப்பாங்க.

*பார்க்கிங் கட்டணம் இல்லை, இடைவேளையில் சலுகை விலையில் ஸ்நாக்ஸ் எனக் கொடுத்து தியேட்டருக்கு வரவைப்பார்கள் உரிமையாளர்கள்.

*சுட்டி டிவி, போகோவில் சிங்சாங், டோரா எல்லாரும் கொரொனா விழிப்புணர்வு பாடல் பாடி படங்களில் நடிப்பார்கள்

*இரண்டு காலர் ட்யூன் சக்சஸ் ஆனதால் மூன்றாவதாய் காலர் ட்யூன் இங்கிலீஸ் மற்றும் இந்தியில் வரும்

*முதல் லாக்டெளனில் இப்ப என்ன டைம்னு கேட்டோம், இரண்டாம் லாக்டெளனில் இப்ப என்ன கிழமைனு கேட்டோம், அடுத்த அலையில் இது என்ன மாசம்னு கேட்போம்

*கபசுரக்குடிநீரில் பாகற்காயை கலந்து குடிப்போம்.

*எப்பிடியும் கொரொனா அலையில் உள்ளாட்சி எலக்சன் வரலாம். எனவே கொரொனா அலையில் அலைபோல் வந்திருக்கும் தொண்டர்களே னு பேனர் கண்டிப்பாய் இருக்கும்

*அடுத்த ஐ பி எல், தொற்று இல்லாத உலக நாட்டில் நடக்கும்.மேன் ஆப் த மேட்ச் க்கு பரிசாக லைப் டைம் மெடிக்க்ளைம் பாலிசி தருவார்கள்.

*உணவு ஆர்டரை டெலிவரி கொடுக்க இன்னும் ஆட்கள் ஊர் முழுக்க அதிகரிப்பார்கள்.

*இரண்டு வருடமும் பாஸ் பன்னிவிட்டதால் மூன்றாவது வருடமும் பாஸ் பன்னிவிட வேண்டும் என்று வேண்டுவார்கள் கொரோனா பேட்ச் மாணவ மாணவிகள்.

*சிங்கிள், டபுள்,த்ரிபிள் லேயர் மாஸ்க்குகள் வந்துவிட்டதால் அடுத்த அலையில் தகரத்தில் செய்த மாஸ்க் போடும் நிலை வரலாம்.

*பழைய மெகா சீரியல் எல்லாம் போட்டு முடிந்துவிட்டதால், அடுத்து பொதிகை டிவியில் 90 களில் வந்த “சாந்தா காப்பி கொண்டாமானு” கேட்கும் நாடகம் போடுவாங்க.

*கொரோனா PPE கிட் போட்டு கூட சிலர் நாடகத்தில் நடிக்கலாம்.

*you tube ல் முக்கியமான எல்லா வீடியோவும் பார்த்துவிட்டதால் கடைசியா பொழுதுபோகலைனு கல்யாண வீடியோவை பார்ப்போம்.

*பெட் இல்லை என்ற துயரம் நீங்க மடக்கு கட்டில், நாடா கட்டில் வீட்டுக்கு வீடு வாங்கி வைத்துக் கொண்டு ஆஸ்பத்திரி செல்லலாம்.

*ஆன்லைன் க்ளாசில் படிச்சு கேம்பஸில் வேலை வாங்கிய மாணவன்னு கல்லூரிகள் விளம்பரம் செய்வாங்க.

*இண்டர்வியூவில் உங்க தகுதி என்னனு கேட்க work from home இரண்டாண்டு எக்ஸ்பீரியன்ஸ் இருக்குனு சொல்லி கம்பெனி மாறலாம்.

*தவழும் குழந்தைக்கு கூட mute/unmute தெரிந்திருக்கும்.

*வெயிலோடு விளையாடியது போய் ஆன்லைனில் விளையாடுவதையே ஆல்டைம் ஃபேவரைட்டாய் குழந்தைக்கு ஆகியிருக்கும்.

*பார்க், பீச் எல்லாம் ஐ நாவின் புராதான சின்னங்களில் சேர்த்திருப்பார்கள்.

*என்னடா ஊரு இது, எனக்கு மரியாதையே இல்ல.எவனும் வெளியவே வரமாட்டீங்கிறீங்கனு அடுத்த வருசமும் கோபித்துக் கொள்ளும் அக்னி நட்சத்திரம்.

Representational image

*வாடகை கொடுப்பதையே மறந்து போயிருப்போம்.ஆமா நீங்க யாருனு சார்லி கேட்பது போல் ஹவுஸ் ஓனரை பார்த்து கேட்போம்.

*சுடுதண்ணீர் மட்டும் வைக்கத் தெரியும் ஆண்கள் எல்லாரும் சமையலில் செஃப் தாணுவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு நிபுணத்துவம் பெற்றுவிடுவர்.

*மிக்சிக்கு சைலன்சர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்.

*ஞாயிற்றுக்கிழமையும் மற்றொரு நாளே எனும் ஜென் நிலை உருவாகியிருக்கும்

*வீட்டில் ரம்மி, கார்ட்ஸ் ஆடி அதில் ப்ளாக் பெல்ட்டே வாங்கியிருப்பாங்க.

*பார்மல் பேண்ட் சர்ட் விளம்பரம் பார்க்கும் போதெல்லாம் காதலியை கைக்குழந்தையோடு பார்ப்பது போலிருக்கும்.

*ஆதார் கார்ட் இருக்கும் அனைவரின் கையிலும் ஆண்ட்ராய்ட் போன் இருக்கும்.

#இணையமே என் இதயமே

ஊருக்கு ஊர் கபடி போட்டி நடத்துகிற மாதிரி கவிதை போட்டி நடக்கும். பொன்னியின் செல்வனை படிக்காதவனை ஏன் பொறந்தேனு கேட்பாங்க. இறந்தவர்க்கு ஆன்லைனில் அனுதாபக் கூட்டம் நடக்கும். ஸ்பேசில் இரங்கற்பா பாடுவார்கள். மாற்றுக்கருத்து கொண்ட கருத்தாளர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராகவும்/ ஆதரவாகவும் ஆன்ராய்ட் ஆப் உருவாக்குவார்கள். ட்விட்டரில் தினசரி இந்திய அளவில் ஏதேனும் ட்ரெண்ட் செய்தால் தான் அன்றைய நாள் அருமையான நாளாக அமையும். மீம்ஸ் போட்டோக்கள் எல்லாம் தமிழில் தீர்ந்து விட்டதால் தெலுங்கு, கன்னடம், இந்திப் படத்திலிருந்தும் கூட இறக்குமதி ஆகும்.

Representational image

எவனா இருந்தாலும் சரி என்பது போல எதா இருந்தாலும் forward எனும் நோக்கில் வாட்ஸ் அப்பில் வண்டி வண்டியா தகவல் வரும். கூடவே வதந்தியும்.

மனுஷ்யபுத்திரன் சொன்னதைப் போல “வதந்தி எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதை கண்டுபிடிக்க முடியாது. அது கிளம்பும் போதே தான் உருவான மூலத்தின் தடயங்களை அழித்துவிட்டே கிளம்புகிறது. ஒவ்வொருவரையும் கடக்கும் போது தன்னைக் கொஞ்சம் பெருக்கிக் கொண்டே செல்கிறது” என்று சொல்லியிருப்பார். முடிந்தவரை வதந்தி பரப்பாமல் இருப்போம். அன்பை விதைப்பதை விட நேர் மறை எண்ணங்களை விதைப்போம். ஆரோக்யமாக இணையத்தைப் பயன்படுத்துவோம். தடுப்பூசி போடுவோம். மூன்றாவது அலையை முறியடிப்போம்.

Also Read: எல்லா அப்பாக்களுக்கும் இந்தக் கட்டுரை சமர்ப்பணம்..! #MyVikatan

கத்தியை அடிக்கடி உபயோகப்படுத்துபவனே அது கூராய் இருக்க வேண்டுமென விரும்புவான். அதைத் தீட்டுவான். உபயோகிக்காதவன் கத்தி எப்படியிருந்தால் நமக்கென்ன என்று போய்விடுவான். லாக்டெளனும் அப்படித்தான். அடுத்த லாக்டெளனோ அலையோ வரக்கூடாதென நினைப்பவர்கள் சுயகட்டுப்பாடு, அரசு நெறிமுறைப்படி வாழ்வது அவசியமாகிறது.

மகாபாரதத்தில் யட்சன் கேட்கிறான்: மனித மனத்தின் மிகப்பெரிய அதிசயம் எது?

‘கண்ணெதிரில் நிகழும் மரணத்தை கண்டும் தான் மட்டும் நிலையானவன் என்று நினைப்பது”என பதிலளிக்கிறார் தர்மன். சகிப்புத்தன்மையும், பெருந்தன்மையும் அதற்கு புரியாத விஷயங்களாகின்றன. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்னும் குறள் போல அஞ்ச வேண்டிய விஷயங்களுக்கு கட்டாயம் அஞ்சி நடப்போம்.

மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.