இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையே நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்த செளமியா சந்தோஷூக்கு இஸ்ரேல் நாட்டின் கௌரவ குடியுரிமை வழங்கப்படும் என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரேல் நாட்டின் துணைதூதர் ரோனி யெடிடியா கிளீன் (Rony Yedidia Clein) “இஸ்ரேல் மக்கள் செளமியாவை உண்மையான இஸ்ரேல் குடிமகளாக கருதுகின்றனர். அவளை அவர்கள் தங்களது உறவினரில் ஒருத்தியாக பார்க்கின்றனர்” என்றார்.

இது குறித்து செளமியாவின் கணவர் சந்தோஷ் கூறும் போது, “ இதனை எனது மனைவிக்கு வழங்கிய பெரிய மரியாதையாக நாங்கள் கருதுகிறோம்.” என்றார்.

image

முன்னதாக, காஸா எல்லைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இஸ்ரேலின் அஸ்கேலான் நகரில் வயதான பெண்மணி ஒருவரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பினை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சௌமியா என்பவர் ஏற்றிருந்தார். அண்மையில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.

கடந்த 7 ஆண்டுகளாக சௌமியா, அஸ்கேலான் நகரில் பணிபுரிந்து வந்த நிலையில், அவரது கணவரும் ஒன்பது வயது மகனும் கேரளாவில் வசித்து வருகின்றனர். தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் சௌமியா இந்தியாவில் இருந்த தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்ததாகத் தகவல் வெளியானது. ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் IRON DOME அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இஸ்ரேல் பகுதியில் சிலர் உயிரிழக்கக் காரணமாக அமைந்ததாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.