கடந்த சில நாள்களில் உத்தர பிரதேசம், மகாராஷ்ட்ரா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள், கொரோனா தடுப்பூசிக்கான உலகளாவிய விற்பனை கொள்முதல் ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடிவுசெய்தன. டெல்லியிலும் இதுபற்றிய ஆலோசனைகள் நடந்துவந்த நிலையில், அவர்களும் இம்முடிவை எடுத்துள்ளனர்.

இப்படி வெளிநாட்டிலிருந்து கொள்முதல் செய்யும்பொது, ஃபைசர் மற்றும் மாடெர்னா தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வருவதற்கான வழியும் எளிதாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால், இப்போது தடுப்பூசி தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கும் இந்தியாவின் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் மீது வைக்கப்படும் சுமை சற்று குறையுமென கணிக்கப்படுகிறது.

image

எந்தவொரு தடுப்பூசி இந்தியாவுக்கு வரவேண்டும் என்றாலும், மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில் அது அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளாக இப்போதைக்கு இந்தியாவில் இருப்பவை, கோவிஷீல்ட் (சீரம் நிறுவனம் சார்பில்) ; கோவாக்சின் (பாரத் பயோடெக் சார்பில்) மற்றும் ஸ்பூட்னிக் வி (ரஷ்யாவிலிருந்து) ஆகியவை மட்டுமே. இவற்றில் கோவாக்சின் மட்டுமே உள்நாட்டு தடுப்பு மருந்து. கோவிஷீல்ட், வெளிநாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தெனும்போதிலும், இதன் உற்பத்தி முழுக்க முழுக்க சீரம் நிறுவனம் சார்பாக இந்தியாவில்தான் நடக்கிறது. மற்றொரு தடுப்பூசியான ரஷ்யாவை சேர்ந்த ஸ்பூட்டனிக் வி-க்கான உற்பத்தி இந்தியாவில் ஐந்து நிறுவனங்களில் மட்டுமே நடந்து வருகிறது.

மூன்றாம் கட்ட (Phase III) கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணியில், மாநில அரசுகள் /மருத்துவமனைகளுடன் தொடர்பிலிருக்கும் தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வெளிநாட்டிலிருந்து கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. அவர்களின் கொள்முதலிலும், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட, மேற்குறிப்பிட்ட 3 தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமென்பது விதி.

இந்த விதிக்குட்பட்டு, உ.பி. – மகாராஷ்ட்ரா – ஆந்திரா – தெலுன்கானா – ஒடிசா போன்ற அரசுகள் வெளிநாட்டில் தயாரிக்கப்படும், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை வாங்க பேச்சு வார்த்தையை திட்டமிட்டுள்ளது.

இருப்பினும், இந்த தடுப்பூசிகளுக்கான கொள்முதலை மட்டுமே நம்பியிருந்தால், இந்தியாவில் இருக்கும் தடுப்பூசி தட்டுப்பாட்டை தடுக்க முடியாது என்பதால், மத்திய அரசு சார்பில் ஃபைசர், மாடெர்னா, ஜான்சன் & ஜான்சன் உட்பட வெளிநாட்டில் தயாரித்து விநியோகிக்கப்படுவரும் தடுப்பூசிகளுக்கான இந்திய பரிசோதனைகளை தொடங்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவிலும் இவர்களின் தடுப்பூசி விநியோகம் தொடங்கினால், இங்கு நிலைமை சரியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த அழைப்பை ஏற்று, இப்போதைக்கு ஃபைசர் நிறுவனம் மட்டுமே தங்கள் தடுப்பூசிக்கான இந்திய உரிமத்துக்கு விண்ணப்பித்துள்ளது.

ஃபைசர் மற்றும் மாடெர்னா தடுப்பூசிகள், இரண்டு டோசேஜாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது. ஜான்சன் & ஜான்சன், ஒரு டோசேஜில் தரப்படுவது. இம்மருந்துகள் அனைத்தும் ஒவ்வொன்றாக இந்தியாவில் அனுமதி பெற்ற பின்னரும், ‘புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை விதிகள் 2019’ – ன் இரண்டாம் அட்டவணையின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட விதிகளின்படி, இந்தியாவில் மருத்துவ பரிசோதனையை நடத்துவதற்கு இணையான மருத்துவ சோதனையை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என சொல்லப்படுகிறது.

இப்படி இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் தடுப்பூசி சிக்கலை தவிர்க்க, இந்திய அரசு பலகட்டமாக ஆலோசித்து கொண்டிருக்கும் இதேநேரத்தில், அமெரிக்க அரசு, இந்தியாவுக்கு இந்த விஷயத்தில் உதவுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் அறிவிப்பின்படி, சீரம் – கோவிஷீல்டு ஆகியவை தடுப்பூசி தயாரிப்பது போல், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பதற்கான வழிகளை அமெரிக்கா ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் உறுதுணை : The Print

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.