கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த மார்ச் 27-ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது.

கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. கேரளாவில் இடதுசாரி கட்சியும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டன. அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் பா.ஜ.க, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகள் போட்டியிட்டன. ஏப்ரல் 6-ல் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் நடந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும், என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. இதேபோல், கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கையும் இன்று நடக்கிறது.

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவுதாக வாக்குக் கணிப்புகள் தெரிவித்தன. மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் ஆட்சி அமைக்க 148 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

இந்நிலையில், தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம், கேரளா, புதுச்சேரியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை எட்டு மணிக்கு தொடங்குகிறது. பிற்பகலுக்குள் முன்னிலை நிலவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.