அச்சுறுத்தும் கொரோனா இரண்டாம் அலை முதல் சென்னை அணியில் வெற்றி வரை என இன்றைய முக்கிய செய்திகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 

1. மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தவும், மாநில அரசுகள், தனியார் மருத்துவமனைகள் நேரடியாக கொள்முதல் செய்யவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

2. கடற்கரைகள், பூங்காக்களுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணிக்கு மேல் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

image

3. இரவு நேர ஊரடங்கு காரணமாக, தொலைதூர பேருந்துகள் பகலில் இயக்கப்படும் எனவும் அதிகாலை 4 மணி முதல் புறப்பட்டு இரவு 8 மணிக்குள்ளாக சென்றடையும் வகையில் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

4. இரவு நேர பொது முடக்கம் ரயில்களுக்கு பொருந்தாது என்றும் ரயில் பயணிகள் டிக்கெட்டை காண்பித்து ஆட்டோ மற்றும் டாக்சியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அனைத்து மத பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

6. கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

image

7. தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், சேலம், மதுரை மாவட்டங்களில் அதிகளவில் தொற்று ஏற்பட்டுள்ளது.

8. ஒரே நாளில் 12 வயதுக்குட்பட்ட 406 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

9. 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று தமிழகம் வருகிறது.

10. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 நோயாளிகள் உயிரிழந்ததாக எழுந்த புகார் எழுந்த நிலையில்வெவ்வேறு உடல்நல பாதிப்புகளால் இறப்பு நேரிட்டதாகவும் ஆக்சிஜன் பற்றாக்குறையில்லை என்றும் புதிய தலைமுறைக்கு ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

11. வடமாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ஈரோட்டில் தேங்கிய ஜவுளிகள். 100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் முடங்கியதால், உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்படுள்ளது.

12. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, பஞ்சாப் மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் வரும் 26ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

13. சொந்த மாநிலங்களை நோக்கிச்செல்ல புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில்நிலையங்களை நாடி வருகின்றனர்.

14. ஐபிஎல் தொடரில் சென்னை அணி தொடர்ச்சியாக 2ஆவது வெற்றி. ராஜஸ்தானை 45 ரன் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.