ஜப்பான் நாட்டில் கடந்த 2011 இல் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலையின் காரணமாக புகுஷிமா அணு மின் நிலையம் பாதிப்புக்குள்ளானது. அணுமின் நிலைய உலைகளை குளிரூட்டும் அமைப்பு அதில் பாதிக்கப்பட்டதால் அதிகளவிலான வெப்பம் வெளியாகி உலைகள் சேதமடைந்தன. தொடர்ந்து உலைகளை குளிரூட்ட இருந்த நீரில் கதிர்வீச்சு கலந்து அது கடலிலும் கசியத் தொடங்கியது.

கடலில் கதிர்வீச்சு கலந்த நீர் கலக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கபட்டன. அதற்காக பெரிய அளவிலான தொட்டிகளை கட்டி அதில் அந்த நீரை ஜப்பான் சேமித்து வைத்தது.
இந்நிலையில் தற்போது அதை சுத்திகரித்து பசிபிக் பெருங்கடலில் கலக்க திட்டமிட்டுள்ளது ஜப்பான் அரசு. அதற்கு அந்நாட்டு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

image

இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், “புகுஷிமா உலையில் ஏற்பட்ட விபத்தின் போதும் அதன் பிறகும் அதன் வெப்பத்தையும் கதிர்வீச்சையும் குறைப்பதற்காக லட்சகணக்கான டன் தண்ணீர் பன்படுத்தப்பட்டது. அதில் குறைவான கதீர்வீச்சு கொண்ட நீர் பசிபிக் பெருங்கடலுக்குள் சென்றது, அதிக கதீர்வீச்சு கொண்ட தண்ணீர் அணுவுலை வளாகத்திலேயே தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டது. அப்படியாக இதுவரை 10லட்சம் டன் நீர் அந்த வளாகத்தில் உள்ளது.

என்ன செய்வது என்று தெரியாமல் முழிபிதுங்கி நின்ற அரசு இப்போது அதை பசிபிக் பெருங்கடலில் கலப்பது என்று முடிவெடுத்துள்ளது. சேமித்து வைக்கப்பட்டுள்ள நீரில் உள்ள அதிகளவு கதிர்வீச்சு அகற்றப்பட்ட பிறகே கடலுக்குள் செலுத்தப்படும் என்று அறிவித்தாலும், அதில் டிட்ரியத்தை முழுமையாக அகற்றுதற்கான தொழில்நுட்பம் உலகத்திடம் இல்லை.
ஜப்பானின் இந்த முடிவிற்கு உலக நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

உடனடியாக இதை செய்யப்போவதில்லை என்றும், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாகும் என ஜப்பானிய அரசு அறிவித்திருந்தாலும் இந்த அறிவிப்பு கடலோர நாடுகளை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே “பசிபிக் பெருங்கடல் செத்துவிட்டது, நாங்கள் பார்த்த சார்டைன்கள், ஒங்கில்களை பாரக்கமுடியவில்லை” என பயணம் போக்க்கூடிய மாலுமிகள் சொல்லிவருகின்றனர். 

இந்த நிலையில் ஜப்பானிய அரசின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை கவலை கொள்ள செய்துள்ளது. அணு சக்தியும் மானுடமும் ஒன்றாக வாழமுடியாது என்கிற கூற்று மீண்டும் உண்மையாகியுள்ளது” என தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.