மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் இன்று முதல் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில மாதங்களாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் கொரோனா அதிவேகத்தில் பரவி வருகிறது. இதனால் மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

குறிப்பாக மகாராஷ்டிராவில் மட்டும் புதிதாக 35,952 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்த மாநிலத்தில் 2,48,604 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் இன்று முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Beed Lockdown News: Beed announces fresh curbs for 10 days, 7 days in  Parbhani | Aurangabad News - Times of India

பீட் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து உணவகங்கள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், ஆகியவை ஏப்ரல் 4 ஆம் தேதிவரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மளிகை, பால் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் திறந்த நிலையில் இருக்க நிர்வாகம் அனுமதித்துள்ளது.

மகாராஷ்டிராவின் பர்பனி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏற்கெனவே மார்ச் 24 ஆம் தேதியில் இருந்து மார்ச் 31 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.