சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில், அண்மைக்காலமாக திமுகவை கடுமையாக விமர்சிக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்தது, என்னுடைய திட்டம் என விமர்சித்துள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.