கொல்கத்தாவில் உள்ள மண்டல ரயில்வே தலைமை அலுவலகங்களில் ஏற்பட்ட தீ விபத்தின்போது 9 பேர் உயிரிழந்தனர்.

கொல்கத்தாவின் மையப் பகுதியில் தென் கிழக்கு மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இக்கட்டடத்தின் 13ஆவது மாடியில் நேற்று மாலை 6 மணியளவில் ஏற்பட்ட தீ பின்னர் மளமளவென பரவி பிற அடுக்குகளுக்கும் பற்றியது. இதையடுத்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களில் நால்வர் சென்ற லிஃப்ட்டில் மின் கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கிய நால்வரும் இறந்தனர்.இது தவிர மற்ற 5 பேர் தீயில் சிக்கி இறந்தனர்.

விபத்து நடந்த கட்டடத்தில் இருந்த சிலரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. தீ விபத்து நடந்த இடத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் பார்வையிட்டார்.

image

பின்னர் பேசிய அவர், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக தரப்படும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தரப்படும் என்றார். தீ விபத்து பெரிய அளவில் இருக்கும் நிலையில் ரயில்வே உயரதிகாரிகள் ஒருவரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றும் தீயணைப்பு பணிகளில் ரயில்வே தரப்பில் ஒத்துழைப்பு இல்லை என்றும் தெரிவித்த மம்தா எனினும் இவ்விவகாரத்தில் தான் அரசியல் செய்ய விரும்பவில்லை என்றார். இதற்கிடையில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலும் இரங்கல் தெரிவித்துள்ளார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.