பிரதமர் மோடி முதல்முறையாக பதவியேற்ற காலம் துவங்கி இன்று வரை ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று அகில இந்திய வானொலியின் வாயிலாக மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அந்த வகையில் இன்று பிரதமர் மோடி கலந்து கொள்ளும் 74வது மன் கீ பாத் நிகழ்ச்சியானது காலை 11 மணிக்கு தொடங்கியது. அறிவியல் முதல் தமிழ் மொழி வரை பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பிரதமர் மோடி மக்களிடம் பகிர்ந்துகொண்டாா்.

முன்னதாக, 73வது மன் கீ பாத் நிகழ்ச்சியில் பன்முகத்தன்மை கொண்ட இந்தியர்களின் கலை, மொழி, கலாசாரம், பயணம் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டிருந்தாா்.

மோடி

அந்த வகையில், பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துகொண்ட மக்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். அவ்வாறு, வாழையில் இருந்து ஏராளமான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து வரும் தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, நேயர் ஒருவர், “எதை எண்ணி தற்போது வரை வருத்தம் கொள்கிறீர்கள்?” என்று கேட்ட கேள்விக்கு

“தமிழ் மொழியின் சிறப்புகளைப் பலரும் என்னிடம் தெரிவித்துள்ளனர். உலகின் மிகவும் தொன்மையான, சிறந்த மொழியான தமிழ் மொழியை கற்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்தும், அதில் தோல்வியுற்றேன். என்னால் தமிழ் மொழியை கற்க இயலவில்லை” என்று வருத்தம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மாேடி, வரப்போகின்ற கோடை காலத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், இயற்கை வளங்களைப் பாதுகாக்குமாறும் நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டாா். மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

அதேபோல், இந்திய விஞ்ஞானியான சர் சி.வி. ராமனின் கண்டுபிடிப்புகள் அறிவிக்கப்பட்ட நாளான இன்றைய தேசிய அறிவியல் தினத்தில் இளைஞர்கள் பலரும் அறிவியல் குறித்து நிறைய அறிந்து கொள்வது அவசியம். தற்சாா்ப்பு பொருளாதார இலக்கிற்கு அறிவியல் அரும்பங்கு ஆற்றுகிறது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மக்களிடம் பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டாா்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.