அமெரிக்காவின் நாசா அனுப்பிய ரோபோட்டிக் ரோவர் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. முதல் புகைப்படத்தையும் நாசாவுக்கு அனுப்பிவைத்தது.

புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் நாராயணசாமிக்கு உத்தரவு. துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி.

நியமன உறுப்பினர்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமை இல்லை என நாராயணசாமி பேட்டி. ஆட்சியை கவிழ்க்கும் பாரதிய ஜனதா கட்சியின் முயற்சியை முறியடிப்போம் என்றும் உறுதி.

Image result for modi

மார்ச் ஒன்றாம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அரசியல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

தமிழகத்தில் அதிமுகவை பயன்படுத்தி பாஜக காலூன்ற பார்க்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மதுரையில் நடைபெற்ற அரசியல் எழுச்சி மாநாட்டில் ஸ்டாலின் விமர்சனம்.

கோவையில் தடுப்பூசி போடப்பட்ட 3 மாத‌ குழந்தை உயிரிழப்பு. நிமோனியா காய்ச்சலால் இறந்ததாக சுகாதாரத் துறை விளக்கம்.

அமேசான் நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தகத்துக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை.

Image result for gris moris ipl

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர். தென் ஆப்ரிக்காவின் கிறிஸ் மோரிஸை 16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

கைல் ஜேமிசன் 15 கோடி ரூபாய்க்கும், மேக்ஸ்வெல் 14 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கும் ஏலம். ஜேசன் ராய், ஆரோன் பின்ச் போன்ற முன்னணி வீரர்கள் ஏலத்தில் விலைபோகவில்லை.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச். மகளிர் பிரிவில் அரையிறுதியில் தோற்று கண்ணீருடன் வெளியேறினார் செரீனா வில்லியம்ஸ்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.