பிரதமர் நரேந்தி மோடி வருகிற 14 ஆம் தேதி சென்னை வரும் நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் முக்கிய சந்திப்புகளுக்காக 20 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.வரும் 14ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடிக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, வருகிற 14 -ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்திற்கு காலை 10.40 மணியளவில் வரும் பிரதமர் அங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கிற்கு செல்கிறார். அங்கு மெட்ரோ ரயில் விரிவாக்கம் மற்றும் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் முக்கிய சந்திப்புகள் நடத்த 20 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர் பிரதமர் பிற்பகல் ஒன்றரை மணியளவில் கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்படுகிறார்.

image

பிரதமர் மோடி 3 மணி நேரம் மட்டுமே சென்னையில் இருக்கும் நிலையில், சென்னை விமான நிலையம், அடையாறு ஐஎன்எஸ், நேரு உள்விளையாட்டரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 6 ஆயிரம் காவல் துறையினர் 4 அடுக்குகளாக பாதுகாப்பு தர உள்ளனர். இரவு நேரங்களில் வாகனச் சோதனையை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளதுடன் திருவல்லிக்கேணி, பூக்கடை, மண்ணடி, பாரிமுனை பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைகள் அனல் பறக்க நடந்து வரும் நிலையில் பிரதமரின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.