உத்தராகண்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிறகு பனிப்பாறை ஏரி வெடிப்பே காரணம் என சொல்லப்படுகிறது. பனிப்பாறை ஏரி வெடிப்பு என்றால் என்ன? விரிவாக பார்க்கலாம்.

உத்தராகண்ட் மாநிலத்தில் 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. CLOUD BURST எனும் மேக வெடிப்பே இதற்கு காரணம். ஆனால் இம்முறை ஏற்பட்டிருப்பது. பனிப்பாறை ஏரி வெடிப்பு. ஆங்கிலத்தில் இதனை GLACIAL LAKE OUTBURST FLOOD என அழைக்கின்றனர்.

image

பொதுவாக பனிப்பாறைகள் உருகும் போது இயற்கையான முறையில் நீர் தேக்கங்கள் உருவாகின்றன. இவற்றை பனி ஏரிகள் என்று அழைக்கின்றனர். இந்த பனி ஏரிகள் செங்குத்தான பகுதிகளிலும் நிலைத்தன்மையற்ற மலைச்சரிவுகளுக்கு அருகிலும் உருவாகின்றன. இவற்றுக்கு வலுவான கரைகள் இருக்காது என்பதால் எப்போது வேண்டுமானாலும் உடையலாம். திடீரென ஏற்படும் அழுத்தம், பனிச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் இந்த பனி ஏரிகள் உடைந்து அதிகளவிலான நீர் வெளியேறுகிறது. அப்படிப்பட்ட நிகழ்வு தான் உத்தராகண்டில் நிகழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.