கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒருவராக கொடிகட்டிப் பறக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் வாழ்த்துமழை பொழிந்துவரும் ரசிகர்கள் தடுப்புகளை தகர்த்து ஒற்றை வீரனாக பந்தைக் கடத்திச் செல்பவர், BICYCLE KICK ஆல் எதிரணியை ஸ்தம்பிக்க வைப்பவர், காற்றை கிழித்துச் சென்று HEADING கோல்களை அடித்து மிரள வைப்பவர். இது போன்ற பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்தான் போர்ச்சுகல் நாட்டின் மைந்தன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. நம் நாடு ஒருமுறையாவது கோப்பை வெல்லாதா என ஏங்கிக் கிடந்த போர்ச்சுகல் மக்களுக்கு, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற யூரோ கோப்பையை வசப்படுத்திக் கொடுத்த ரொனால்டோ இன்று தனது 36 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

image

இளம் வயது முதல் 4 கிளப் அணிகளுக்காக விளையாடியுள்ள கிறிஸ்டியானோ, 875 போட்டிகளில் களம் கண்டு 660 கோல்களை அடித்துள்ளார். தேசிய அணிக்காக இதுவரை 102 கோல்களை அடித்து, சர்வதேச அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளார் ரொனால்டோ. முதலிடத்திற்கான இடைவெளி 7 கோல்கள் மட்டுமே. கிளப் அளவில் 29 கோப்பைகளை வசப்படுத்தியுள்ள ரொனால்டோ, சிறந்த கால்பந்து வீரருக்கான அங்கீகாரமான பாலண்-டி-ஆர் விருதை 5 முறை வென்றுள்ளார்.

image

இவை தவிர FIFA சம்மேளனத்தால் வழங்கப்படும் சிறந்த வீரருக்கான விருதுகள், யூரோ கால்பந்து சம்மேளத்தால் வழங்கப்படும் GOLDEN SHOE என இவரது சாதனைப் பட்டியல் நீள்கிறது. கால்பந்தின் மீது மோகம் கொண்ட இளைஞர்களின் நாடித்துடிப்பாக விளங்கி வரும் ரொனால்டோதான் இன்ஸ்டாகிராமிலும் அதிகம் பின்தொடரப்படும் பிரபலமாக உள்ளார்.

image

தனித்துவமான ஆட்டங்களின் மூலம் உலகின் அனைத்து நாடுகளிலும் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ரொனால்டோவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. பல்வேறு பிரபலங்களும் ரொனால்டோ மீதான அன்பை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

வரவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் வாகை சூடி, அக்கோப்பையை ரொனால்டோ முத்தமிட வேண்டும் என்பதே அவரை மனதில் வைத்து பூஜிக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.