மியான்மரில் ராணுவ ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளும், சீனாவும் ஐக்கிய நாடுகள் அவையில் எதிரெதிர் நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றன. இந்தியா கவனமாக அடியெடுத்து வைக்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்த ஹிலரி கிளிண்டன் மியான்மர் தலைவரான ஆங் சான் சூச்சியைச் சந்தித்தார். மக்களாட்சியின் தொடக்கப்புள்ளியாக அது அமைந்தது. சில வாரங்களுக்கு முன்பாக மியான்மருக்கு வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, தலைநகர் நேபிதாவில் மியான்மரின் ராணுவத் தளபதி மின் ஆங் லேங்கைச் சந்தித்தார்.

நாடு ராணுவ ஆட்சிக்குத் திரும்பியது. இவற்றைக் கொண்டே அமெரிக்கா ஜனநாயகத்தையும் சீனா ராணுவ ஆட்சியையும் ஆதரிப்பதாக பொருள் கொள்ள முடிகிறது. இதை உறுதிப்படுத்துவதுபோல, ஐநா பாதுகாப்பு அவையில் ராணுவ ஆட்சிக்கு எதிரான தீர்மானத்தை தடுத்திருக்கிறது சீனா. பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் ரத்து அதிகாரத்தை இதற்குப் பயன்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே பலமுறை சர்வதேச விசாரணைகளில் இருந்து மியான்மரை சீனா காப்பாற்றிய வரலாறு உண்டு. அதன் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்கலாம். மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை, உள்நாட்டு விவகாரம் என்றும், அமைச்சரவை மாற்றம் என்றும் சீனாவின் அதிகாரபூர்வ ஊடகங்கள் கூறுகின்றன.

image

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதற்காகவே மியான்மர் ராணுவத்தை சீனா ஆதரிப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். மியான்மர் ஒத்துழைப்புடன் நடக்கும் பொருளாதாரப் பாதை உள்ளிட்ட முதலீடுகளைப் பாதுகாப்பதும் சீனாவின் நோக்கமாக இருக்கும்.

இந்தியா எப்போதும் மக்களாட்சிக்கு ஆதரவான நாடு. சீனாவைப் போல ராணுவ ஆட்சிக்கு ஆதரவாகச் செயல்பட முடியாது. அதே நேரத்தில் ராணுவ ஆட்சியைக் கடுமையாக எதிர்த்து எல்லையோரத்தில் பகையை வளர்க்கவும் கூடாது. வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதக் கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்கு மியான்மரின் ராணுவத்தின் ஒத்துழைப்பு இந்தியாவுக்கு எப்போதும் தேவைப்படுகிறது. அதனைக் கருத்தில் கொண்டே இந்தியா கவனமாக கையாளுவதாக தெரிகிறது. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே மியான்மரை நோக்கிய இந்திய நகர்வு அமையப் போகிறது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.