தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 5-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு. ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு.

அரசின் சேவைகளை வீட்டில் இருந்தே பெற புதிய திட்டம் அறிமுகம். 1100 என்ற எண்ணிற்கு அழைத்தால், சேவைகளை விரைவில் பெற இயலும் என சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் அறிவிப்பு.

இதுதான் அதிமுக அரசின் ‘கடைசி’ பட்ஜெட் கூட்டத்தொடர் என்று ஸ்டாலின் பேட்டி. திமுகவிற்கு இதுதான் கடைசி தேர்தல் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

image

கிராம சபைக் கூட்டங்களை நடத்துவதற்கு ஸ்டாலின் யார்? சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

சிபிஎஸ்இ 10 மற்றும்12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு. 12-ஆம் வகுப்பு தேர்வு இரண்டு ஷிப்டுகளாக நடைபெறும் என அறிவிப்பு.

டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் தடுக்க எல்லையில் பல அடுக்கு தடுப்புகள். சாலைகளில் ஆணிகள்… அடக்குமுறைகளை நிறுத்தாத வரை பேச்சுவார்த்தைக்கு வர முடியாது என விவசாயிகள் திட்டவட்டம்.

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த விவசாயிகள் பிரச்னை. எதிர்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு.

image

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதை உறுதி செய்த கோட்டாட்சியர். ஜல்லிகட்டு கமிட்டியின் முடிவுக்கு கட்டுப்படுவதாக சர்சைக்குள்ளான வீரர்கள் ஒப்புதல்.

ராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மியான்மரில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் ரோந்து. ஆங் சான் சூச்சியை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நாடுகள் கோரிக்கை.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னிக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஸ்கோ நீதிமன்றம் உத்தரவு. பரோல் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு.

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து. ஆஸ்திரேலியா – தென்னாப்ரிகா தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் வாய்ப்பு.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.