கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ் – ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர்.

பெங்களூருவில் தங்கியிருக்கும் சசிகலாவை கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ், கர்நாடக அமமுக செயலாளர் சம்பத் ஆகியோர் சந்திக்க சென்றதாக இரண்டு நாட்களுக்குமுன்பு வீடியோ ஆதாரத்துடன் தகவல் வெளியானது. ஆனால், சசிகலா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால், கர்நாடகா அதிமுக செயலாளரை சந்திக்கவில்லை என கூறினர்.

இதுகுறித்து அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி கூறுகையில், யுவராஜ் சசிகலாவை சந்தித்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் கட்சி நிர்வாகம் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இந்நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் யுவராஜ் நீக்கப்படுவதாக அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ் – ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.