நடிகர்  ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் அவரை வில்லன் ஒருவர் கரன்ட் கம்பத்தில் கட்டிப்போட்டு செமையாக வெளுத்து வாங்குவர். அந்த அடியை வாங்கும் ரஜினிகாந்தின் உடல் முழுவதும் ரத்தம் பீறிட்டு பாய்கிற போதும் சிரிப்பார் ‘உங்களுக்கு கோவமே வராதா?’ என கேட்பார் ரஜினியின் சகோதரர். அடுத்த சில காட்சிகளில் அதே வில்லனை அதே கரன்ட் கம்பத்தில் கட்டிப்போட்டு ரஜினிகாந்த் வெளுத்து வாங்குவார். காயம்பட்ட வில்லனை பரிசோதிக்கும் மருத்துவர்கள் ‘நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி என எல்லாத்துலயும் சண்டை வெறி ஊறிப்போன ஒருவனால் தான் இப்படி அடிக்க  முடியும்’ என்பார்கள். அது மாதிரியான ஒர் இன்னிங்க்ஸை தான் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாடி இருப்பார். 

ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தலை, நெஞ்சு, கை, இடுப்பு பகுதி என புஜாராவின் உடலை பந்துகளால் அடித்த போதும் அந்த பவுலிங் அட்டாக்கிங்கை சமாளித்தபடி ’மாணிக்கம்’ போல விளையாடி இருப்பார் புஜாரா. சுமார் பதினோரு முறை புஜாராவை ஆஸ்திரேலிய பவுலர்கள் பந்து பதம் பார்த்தது. அதே புஜாராதான் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட் பந்துகளை பவுண்டரிக்கும் அதே இன்னிங்ஸில் விளாசியிருப்பார். இங்கே புஜாரா மாணிக் பாட்ஷா. 

image

இந்நிலையில், அந்த டெஸ்ட் போட்டியில் பட்ட காயம் இப்போது கன்றிப்போய் உள்ளது என தெரிவித்துள்ளார் புஜாரா. 

“அந்த இன்னிங்ஸ் நான் விளையாடிய கடினமான இன்னிங்ஸில் ஒன்று. விக்கெட் வீழ்த்த வேண்டுமென்பது ஆஸ்திரேலியாவின் கேம் பிளான். விக்கெட்டை விடக்கூடாது என்பது எங்களது கேம் பிளான். எப்படியாவது ஒரு முழு செஷனும் நான் விளையாட வேண்டுமென்பதில் தீர்க்கமாக இருந்தேன்.

அதேநேரத்தில் ஒரு கட்டத்தில் விக்கெட்டை வீழ்த்த வேண்டுமென்ற அழுத்தம் அவர்கள் மீது வீழ்ந்தது. என உடலில் படும் பந்துகளை பற்றி நான் கவலை கொள்ளக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தேன். ஏனென்றால் அந்த ஆடுகளத்தில் ஒரு எண்டில் கணிக்க முடியாத அளவுக்கு பந்து பவுன்ஸ் ஆனது. நான் அதிகமுறை காயம் பட்டதும் அந்த எண்டில்தான்.

ஷார்ட் பாலாக அவர் வீசிய பந்துகள் எல்லாம் உடலுக்கே வந்தன. பந்து என உடலில் படுவதானால் நான் அவுட்டாக போவதில்லை. அதுதான் எனது எண்ண ஓட்டமாக இருந்தது. அதேநேரத்தில் அவர்கள் வீசிய லூஸ் பாலை பயன்படுத்தி ஷாட் ஆடினேன். பந்து என உடலில் பட்ட போதெல்லாம் கடுமையான வலி. இருந்தாலும் நான் இங்கிருந்து அவுட்டாக போவதில்லை என்பதில் தீர்க்கமாக இருந்தேன். அந்த வலி பேட்டை இறுக்கமாக பற்றி விளையாடவே முடியாத சூழலை கொடுத்தது. இன்னும் அந்த இன்னிங்ஸில் பட்ட காயம் ஆறவில்லை. ரத்தம் வடிகிறது, ரத்த கட்டு இருக்கிறது, காயம் கன்றிப்போய் உள்ளது” என தெரிவித்துள்ளார் புஜாரா. 

image

அந்த இன்னிங்ஸில் 211 பந்துகளில் 56 ரன்களை எடுத்திருந்தார் புஜாரா. 

தகவல் உறுதுணை: TIMES OF INDIA 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.