பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை வரிச்சலுகை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, வறுமை அதிகரிப்பு என பல்வேறு சூழல்களுக்கு மத்தியில் பட்ஜெட் தாக்கல் நடைபெற இருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வரவிருக்கும் பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை வரிச்சலுகை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ரூ.2.5 லட்சம் வரை வருமானத்திற்கு வரி இல்லை; ரூ 2.5 லட்சத்துக்கும் 5 லட்சத்துக்கும் இடையிலான வருமானத்திற்கு 5 சதவீதம்; ரூ .5 முதல் 7.5 லட்சம் வரை 10 சதவீதம்; ரூ .7.5 முதல் 10 லட்சம் வரை 15 சதவீதம், ரூ .10 முதல் 12.5 லட்சம் வரை 20 சதவீதம்; ரூ .125 முதல் 15 லட்சம் வரை 25 சதவீதமும், ரூ .15 லட்சத்துக்கும் அதற்கு மேல் 30 சதவீதமும் வரிச்சலுகை இருந்து வருகிறது. மேலும், 60 வயது வரையிலான அனைத்து தனிநபர் வரி செலுத்துவோருக்கும் இது பொருந்தும்.

தற்போது, நிலையான வரிவிலக்கு ரூ .50,000 வரை உள்ளது. வரி செலுத்துவோரின் கையில் அதிக பணம் கொடுக்க நிலையான விலக்கு வரம்பை அதிகரிக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் வீட்டுக் கடனுக்கான வரிவிலக்கும் அறிவிக்கப்படலாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.