அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கையும் இரண்டாம் பரிசு பெற்றவர் புகார் அளித்துள்ளார். 

கடந்த 16ம் தேதி நடைபெற்ற உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரருக்கு முதல் பரிசான காரை கொடுப்பதில் மோசடி நடைபெற்று உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை பிடித்து 2ம் இடம் பிடித்த கருப்பண்ணன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், முதல் சுற்றில் களமிறங்கிய 33 வது பனியன் எண் கொண்ட ஹரிகிருஷ்ணன் என்பவர் 3 காளைகளை பிடித்த நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டு களத்தை விட்டு வெளியேறினார். ஆனால் அவர் அணிந்திருந்த 33வது எண் கொண்ட பனியனை முன்பதிவு செய்யாத கண்ணன் என்பவர் அணிந்து தொடர்ந்து 9 காளைகளை பிடித்து ஆள்மாறாட்டம் செய்து முறைக்கேட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

மேலும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெற்றுள்ள ஆள்மாறாட்ட முறைகேடு புகாரினை ஆட்சியர் முன்பதிவு விவரம், ஜல்லிக்கட்டு போட்டி வீடியோ பதிவு போன்றவற்றை ஆய்வுசெய்து ஒன்பது காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த தமக்கு முதல் பரிசை வழங்க வேண்டுமென மாடுபிடி வீரர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தொடர்ந்து தாங்கள் வலியுறுத்தி வருவதாகவும், ஒவ்வொரு சுற்றுகளின் முடிவிலும் மாடுபிடி வீரர்கள் எத்தனை காளைகளை பிடித்துள்ளார்கள் என்ற விவரத்தினை வெளிப்படைத் தன்மையுடன் அறிவிப்புப் பலகை மூலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மாடுபிடி வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலக தமிழ் மக்கள் அனைவரும் போராடிப் பெற்றுக்கொடுத்த ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெறும் இதுபோன்ற முறைகேட்டை தடுக்க, 8 போட்டி நடத்தும் நடைமுறைகளை இன்னும் மேம்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து 33ஆம் எண்ணில் பதிவுசெய்த ஹரிகிருஷ்ணனின் கேட்டபோது, சகவீரர்கள் தாக்கியதால் களம் இறங்கவில்லை எனவும், வெளியேறியபோது கண்ணனிடன் டிஷர்ட்டை கொடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

image

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனை தொடர்புகொண்டு கேட்டபோது தற்பொழுது புகார் மனு வந்துள்ள விழா கமிட்டியினருடன் விசாரணை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வில், ஹரிகிருஷ்ணன், தாக்கப்பட்டதால் வெளியேறியபோது வாடிவாசலில் நின்ற கண்ணன் என்பவர் டிஷர்ட்டை வாங்கிக்கொண்டதாகவும், அவர் முன்பதிவு எதுவும் செய்யாமலும், மாடுபிடி வீரர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையையும் செய்துகொள்ளாமலும் நேரடியாக களத்தில் இறங்கியது தெரியவந்துள்ளது.

இதனிடையே, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முறைகேடு புகார் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.