அமெரிக்காவில் ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்து கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர் வேலைசெய்யும் நிறுவனத்தின் ஐடி கார்டு அணிந்துகொண்டு சென்றதால் வேலையிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்து சில நாட்களுக்கு முன்பு கேபிடோல் ஹில்லில் பலர் கலவரத்தில் ஈடுபட்டனர். அதில் கலந்துகொண்ட ஒரு இளைஞரை அவர் அணிந்திருந்த ஐடி கார்டு காட்டிக்கொடுத்ததால், அடையாளம் கண்டுபிடித்த நிறுவனம் அவரை வேலையைவிட்டே அனுப்பியிருக்கிறது.

image

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட கலவரத்தில் இவர் எப்படி பிடிபட்டார் என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது? கலவரம் நடைபெற்ற இடத்தில் பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களில் ஒன்றில் ஒருவர் கையில் கொடியிடன் ட்ரம்ப் பெயரிட்ட தொப்பியை அணிந்திருந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐடி கார்டில், NDM என்ற எழுத்துகள் தெளிவாக தெரியவே அவர் நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்டார்.
அந்த லோகோவை வைத்து அந்த நிறுவனத்தின் பெயர் Navistar Direct Marketing என்பதை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததால் அவர் திடீரென பணியிலிருந்து நீக்கப்பட்டதாக SFGATE செய்தி வெளியிட்டது.

image

அந்த நபரை வேலையிலிருந்து நீக்கியதற்கான காரணத்தையும் நிறுவனம் வெளியிட்டது. அதில், ‘’ஜனவரி 6ஆம் தேதி கேபிடோலில் நடைபெற்ற கலவரத்தில் எங்கள் நிறுவனத்தின் ஐடி கார்டை அணிந்துகொண்டு ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார். எனவே எங்கள் நிறுவனத்தின் பாதுகாப்பு நெறிமுறைகளை கருத்தில்கொண்டு அவரை வேலையிலிருந்து அதிரடி நீக்க செய்திருக்கிறோம்.

எங்கள் நிறுவனத்தில் வேலைசெய்யும் ஒவ்வொரு ஊழியரின் பாதுகாப்பும், அமைதியும் மிகவும் முக்கியமானது. ஒருவரின் தவறான செயல் மற்றவர்களை பாதிக்கக்கூடாது என்பதை நாங்கள் உறுதிப்படுத்தவே இந்த முடிவை எடுத்திருக்கிறோம்’’ என்று கூறியிருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.