’ஈஸ்வரன்’ படம் பொங்கலுக்கு வெளியாவதையொட்டி, 100 சதவீதம் திரையரங்குகளில் பார்வையாளர்களை அனுமதிக்கக்கோரி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ள சிம்பு ‘என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள்’ என்று நடிகர் விஜய்யையும் பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில்,

“ஈஸ்வரன் பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப்படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான். திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும் திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம். அதற்காகத்தான் இந்தக் கொரோனா காலத்திலும் வெகு பிரயத்தனப்பட்டு உயிரை பணயம் வைத்து நடித்து முடித்து தொழில்நுட்ப வேலைகள் டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சி அல்ல. இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அதே சமயம் அண்ணன் விஜய் அவர்கள் படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் மாஸ்டர் படம் திரையரங்கிற்கு மட்டுமே வரவேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய அந்த மீடியமிற்கு செய்யும் மரியாதை. அதில் எனது பங்கும் இருக்கவேண்டுமென்று விரும்பினேன். 

image

நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள். மக்கள் எங்களைத் திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள். அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை ஆன்லைனில் வெளியிட்டிருக்கலாம்.ஆனால், திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வரவேண்டுமென பொறுத்திருந்து வெளியிடுகிறார். திருவிழா நாட்களில் எப்போதும் பெரிய படங்கள் வெளியாகும்போது மக்கள் பயமின்றி வரத்தொடங்குவார்கள்.

image

என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள். திரையரங்குகள் நிறையட்டும். கொரோனா தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றிபெற்று நிற்கும் நாம் நமது மன அழுத்தங்களிலிருந்து வெளியாக வேண்டும். அதற்கு இந்தப் படங்கள் நிச்சயம் உதவும் உங்களை ம்கிழ்விக்கும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிரார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.