பயிற்சியில் அசத்தல் கேட்ச் பிடித்து கெத்து காட்டிய நடராஜன்!

இந்திய கிரிக்கெட் அணி வரும் வியாழன் அன்று சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன் அறிமுக வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம்பட்ட உமேஷ் யாதவுக்கு மாற்று வீரராக டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார் நடராஜன். இந்நிலையில் இந்திய வீரர்கள் ஃபீல்டிங் பயிற்சியின்போது நடராஜன் சூப்பர்மேன் போல வேகமெடுத்து ஓடி ஹை கேட்ச் ஒன்றை பிடித்து அசத்தியுள்ளார். அந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது பிசிசிஐ. லைக் மற்றும் வியூஸ்களை அந்த வீடியோ அள்ளி வருகிறது. 

இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா தலா ஒரு போட்டிகளில் வென்றுள்ளன. அதனால் தொடர் சமநிலையில் உள்ளது. நடராஜனை மூன்றாவது டெஸ்ட்டுக்கான பிளெயிங் லெவனில் சேர்க்க வேண்டுமென இந்திய கேப்டன் ரஹானே விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது. அனைத்தும் கூடி வந்தால் நடராஜன் வரும் 7 ஆம் தேதி அன்று அறிமுக வீரராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்.  


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM