2021-ஆம் ஆண்டு புத்தாண்டை காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.

’மூக்குத்தி அம்மன்’ வெற்றிக்குப்பிறகு நயன்தாரா ‘நெற்றிக்கண்’, ’காத்து வாக்குல ரெண்டு காதல்’, அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தற்போது, ஹைதராபாத்தில்  ’அண்ணாத்த’ பட ஷூட்டிங்கில் தொடர்ச்சியாக ரஜினியுடன் நடித்தார். ஆனால் யூனிட்டில் உள்ளோருக்கு கொரோனா என்பதால் தற்போது ஷூட்டிங்கை நிறுத்தி வைத்தது படக்குழு.

image

இதனால், ஹைதராபாத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழுவினருடன் நயன்தாரா  ஹோட்டலில் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், புத்தாண்டை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார். அந்தப் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துகளை கூறியுள்ளார். அந்தப் புகைப்படங்களில் புத்தாண்டு உற்சாகத்துடன் நீல நிற உடையில் றெக்கை முளைக்காத தேவதையாக நயன்தாரா மின்னுவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.