தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதி செய்து தரப்படும் என தேர்தல் ஆணைய செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு
செய்வதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்நிலைக் குழுவினர் 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்தனர்.

முதலில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசிய வாத காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். அப்போது, திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் 11 கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

சட்டப்பேரவை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் முறைகேடுகளை களைந்து, சரியான பட்டியலை வெளியிட வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வசதி அளிக்கக் கூடாது. பணப் பட்டுவாடாவை தடுக்க தற்போதிலிருந்தே கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதிமுக சார்பில், தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்ரல் 3 அல்லது 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். அந்தந்த கிராமங்களிலேயே வாக்குச்சாவடி அமைத்து, பயணம் இன்றி வாக்களிக்க வசதி செய்ய வேண்டும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள சாவடிகளை இரண்டாக பிரிக்க வேண்டும். குடிபெயர்ந்து சென்றவர்கள், இறந்தவர்கள் பெயர்களை நீக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்னரும் விடுபட்டவர்கள் பெயர்களை சேர்க்க முகாம்கள் நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ் சின்ஹா “நடப்பு சட்டப்பேரவையின் பதவிகாலம் மே 24 ஆம் தேதியோடு முடிவடைகிறது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்துள்ளன. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினம் தீவிரமாக கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து தற்போது எதுவும் கூறமுடியாது. 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிபவர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுவார்கள். 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதி செய்து தரப்படும். ஒரு வாக்குச்சாவடியில் 1000 பேருக்கு மேல் இல்லாதவாறு கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.