அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவிய நிலையில், வரும் 26 ஆம் தேதி மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவது போட்டி ஆரம்பமாக உள்ளது. முதல் போட்டியோடு கோலி இந்தியா திரும்புகிறார். வேகப்பந்து வீச்சாளர் ஷமிக்கு முதல் போட்டியில் ஏற்பட்ட எலும்பு முறிவினால் அவர்கள் இருவருக்கும் மாற்றாக கே.எல்.ராகுல் மற்றும் முகமது சிராஜ் ஆடும் லெவனில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

image

கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடுவது உறுதி என்றாலும், நான்காவது அல்லது ஐந்தாவது பேட்ஸ்மேனா என்பது மட்டும் தெளிவாகவில்லை. அதேபோல இரண்டு பயிற்சி ஆட்டத்தில் மொத்தமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ் மெல்பேர்ன் டெஸ்டில் அறிமுக வீரராக களம் இறங்குவார் என சொல்லப்படுகிறது. இருப்பினும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சைனி அந்த இடத்திற்கு போட்டி போடுகிறார். 

image

பிருத்வி ஷா: இந்திய அணிக்காக முதல் டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி நல்ல தொடக்கத்தை கொடுக்க தவறிய பிருத்வி ஷாவுக்கு மாற்றாக மற்றொரு இளம் வீரர் சுப்மன் கில் ஆடும் லெவனில் விளையாடுவார் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். முதல் போட்டியில் பிருத்வி ஷாவை சேர்த்தபோதே இதை சொல்லியிருந்தனர். அதேபோல விக்கெட் கீப்பர் சாஹாவுக்கு மாற்றாக பண்ட் மெல்போன் போட்டியில் விளையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.