மேற்குவங்க அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, கடந்த வாரம் மேற்கு வங்கம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டபோது,  அவரின் பாதுகாப்பு அதிகாரிகள் சென்ற கார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகக் கூறி, 3 ஐபிஎஸ் அதிகாரிகளை உடனடியாக மாநிலப் பணியிலிருந்து விடுவிக்குமாறு மத்திய உள்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், முதல்வர் மம்தா பானர்ஜி அரசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

எனினும்  மாநிலப் பணியிலிருந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளை 1954-ஐபிஎஸ் விதியின் அவசரப் பிரிவை பயன்படுத்தி மத்திய அரசுப் பணிக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி, ‘மாநில நிர்வாகத்தை அப்பட்டமாக கைப்பற்ற நினைக்கும் மத்திய அரசின் செயலை அனுமதிக்கமாட்டோம்’ என தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்நடவடிக்கையை தொடர்ந்து, மம்தா பானர்ஜி அரசுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர்.

Centre is brazenly interfering with State Govt functioning by transferring police officers. My gratitude to @bhupeshbaghel @ArvindKejriwal @capt_amarinder @ashokgehlot51 & @mkstalin for showing solidarity to people of Bengal & reaffirming their commitment to federalism.Thank you!
— Mamata Banerjee (@MamataOfficial) December 20, 2020

இந்நிலையில், ஆதரவாக கருத்து தெரிவித்த ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து மம்தா பானர்ஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், “மாநில அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு வெட்கமின்றி தலையிடுகிறது. மேற்கு வங்க அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த தலைவர்களுக்கு எனது நன்றி’’ என குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.