இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் அடிலெய்ட் மைதானத்தில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 244 ரன்களை எடுத்தது. விராட் கோலி 74, புஜாரா 43, ரகானே 42 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 4, பேட் கம்மின்ஸ் 3 விக்கெட் சாய்த்தனர். அதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் தொடங்கியது. தொடக்கம் முதலே அந்த அணி தடுமாறி விளையாடியது. 


முதல் 17 ஓவர்களில் இரண்டு விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. அதன் பிறகு ஸ்மித்தும், லபுஷேனும் கூட்டணி அமைக்க முயற்சித்தனர். இருப்பினும் அந்த முயற்சி பலன் கொடுக்காமல் போனது. இந்திய அணியின் வீரர்கள் ஃபீல்டிங்கில் கேட்ச் வாய்ப்புகளை வீணடித்துக் கொண்டிருக்க அஷ்வின் வீசிய 41 வது பவரின் மூன்றாவது பந்தை லெக் திசையில் ஆட முயன்ற கேமரூன் க்ரீன் பேட்டில் பட்டு மிட் விக்கெட் திசையில் பறந்தது. அப்போது அந்த இடத்தில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி காற்றில் பறந்து அந்த பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார். 


அந்த கேட்ச் ஆட்டத்தின் திருப்புமுனையில் ஒன்று எனவும் சொல்லலாம். அஷ்வின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. விராட் கோலியின் கேட்சை இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.