ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து  இதுவரை கடந்த 3 மாதங்களில் 30,000-க்கும் மேற்பட்ட நடுக்கங்கள் அண்டார்டிகாவை உலுக்கியுள்ளதாக சிலி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

image

தெற்கு ஷெட்லேண்ட் தீவுகள் மற்றும் அண்டார்டிக் தீபகற்பத்திற்கு இடையில் 60 மைல் அகலமுள்ள (96 கி.மீ) கடல் கால்வாயான பிரான்ஸ்ஃபீல்ட் ஜலசந்தியில், 6  மேக்னிட்யூட் அளவிலான பெரிய நிலநடுக்கம் உட்பட ஆயிரக்கணக்கான சிறிய நிலநடுக்கங்கள் கண்டறியப்பட்டதாக  சிலி பல்கலைக்கழகத்தின் தேசிய நில அதிர்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்தனர். பல டெக்டோனிக் தகடுகள் மற்றும் மைக்ரோபிளேட்டுகள் ஜலசந்திக்கு அருகில் சந்திக்கின்றன. இது அடிக்கடி சலசலப்புக்கு வழிவகுக்கிறது, ஆனால் கடந்த மூன்று மாதங்களில் இது அசாதாரணமாக மாறியுள்ளது என்று மையம் தெரிவித்துள்ளது.

“நிலநடுக்கத்தின் பெரும்பகுதி ஒரே வரிசையின் தொடக்கத்தில் குவிந்துள்ளது. முக்கியமாக செப்டம்பர் மாதத்தில், ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது நில அதிர்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. ஒரு வருடத்திற்கு சுமார் 7 அல்லது 8 மிமீ (0.30 அங்குல) வீதத்தில் அகலத்தை அதிகரிக்கும் இந்த நீரிணை இப்போது ஆண்டுக்கு 15 செ.மீ (6 அங்குலங்கள்) விரிவடைந்துவருகிறது. இது 20 மடங்கு அதிகரிப்பு. ஷெட்லேண்ட் தீவுகள் அண்டார்டிக் தீபகற்பத்திலிருந்து மிக விரைவாக பிரிக்கப்படுகின்றன” என்று மையத்தின் இயக்குனர் செர்ஜியோ பேரியண்டோஸ் கூறினார்.

image

அண்டார்டிக் தீபகற்பம் பூமியில் வேகமாக வெப்பமடையும் இடங்களில் ஒன்றாகும். சாண்டியாகோ பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி ரவுல் கோர்டெரோ கூறுகையில், இந்த நிலநடுக்கம் பிராந்தியத்தின் பனியை எவ்வாறு பாதிக்கும் என்பதுபற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.