‘மீ டூ’ (Me too) இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட 3 ஆண்டுகளிக்குப் பிறகு, இன்றும் ஹாலிவுட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக கருத்துக் கணிப்பு ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு #MeToo என்ற இயக்கம் ஹாலிவுட்டையே உலுக்கியதுடன், பல பிரபல நடிகர்களின் பட வாய்ப்பு இழப்புகளுக்கும் காரணமாக அமைந்தது. ஆனால் இன்றும் பாலியல் துன்புறுத்தல் ஹாலிவுட்டில் தொடர்வதாக கடந்த வியாழக்கிழமை ஹாலிவுட் கமிஷனால் எடுக்கப்பட்ட சர்வேயில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த சர்வேயில் இனவெறி குறித்தும் கேட்கப்பட்டது. பங்கேற்றவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் ஹாலிவுட் மாறுபட்ட பின்னணியையும், கண்ணோட்டத்தையும் மதிப்பதாக நம்புகின்றனர். இந்த ஆன்லைன் சர்வே 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த சர்வேயில் டிவி, திரைப்படம், விளம்பரம், இசை, லைவ் தியேட்டர், செய்தி, ஏஜென்சிஸ், பொது உ மற்றும் பெருநிறுவன அமைப்புக என அனைத்துத் தரப்பிலிருந்தும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பெண்கள் பங்கேற்றனர். அதில் 12 மாதங்களில் 67% பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாகவும், 42% பெண்களுக்கு தேவையற்ற பாலியல் ஈர்ப்புத் தொல்லை வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

image

அதி ஒரு பெண், ‘’எங்கள் நிறுவனம் புதிய ப்ராஜெக்டுகளை பெறவேண்டும் என்பதற்காக தலைமை நிர்வாகி என்னை மற்ற நிறுவன ஆளுமைகளிடம் தவறான முறையில் நடந்துகொள்ளுமாறு வற்புறுத்தினார்’’ என்று கூறியிருக்கிறார்.

கலாசாரம் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை சமாளிப்பதில் ஹாலிவுட் முன்னேற்றம் கண்டுள்ளதாக சட்ட பேராசியர் அனிதா ஹில் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த சர்வே கமிஷன் கூறுகிறது. ஆனால் இன்னும் முன்னேற்றம் தேவை என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பணியாளர்களின் ரகசியத்தன்மையை காத்தல், ஒப்பந்தங்களை கட்டுப்படுத்துதல், துன்புறுத்தலை தடுத்தல் போன்றவற்றுக்கு ஆலோசகர்களையும், நிபுணர்களையும் அமர்த்த வலியுறுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.