நிவர் புயல் பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர்

நிவர் புயல் பாதிப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

நிவர் புயல் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயல் மற்றும் கனமழையால் இதுவரை 4 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், புயல் பாதிப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது, மேற்கொள்ள வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சமும் பாடுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM