இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த நீண்ட நெடிய தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். 


சிட்னி  கிரிக்கெட்  மைதானத்தில்  நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் 1992 உலக கோப்பையின் வின்டேஜ் ஜெர்சியில் களம் இறங்கினர். இரு அணி வீரர்களும் மறைந்த டீன் ஜோன்ஸ் மற்றும் பிலிப் ஹுயூக்ஸுக்கு மவுன அஞ்சலி செலுத்திவிட்டு விளையாட தொடங்கினர்.


முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் வார்னரும் – ஃபின்சும் 156 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தொடர்ந்து களம் இறங்கிய ஸ்மித் 66 பந்துகளில் 105 ரன்களை குவித்தார். ஃபின்ச் 114 ரன்களுக்கு அவுட்டானார். மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்களை குவித்தார். 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்களை ஆஸ்திரேலியா குவித்தது. இந்திய அணிக்காக ஷமி அசத்தலாக பந்து வீசினார். 10 ஓவர்களில் 59 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருந்தார்.  


அந்த இலக்கை விரட்ட இந்திய அணி சார்பில் தவனும், மயங்க் அகர்வாலும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். 53 ரன்களுக்கு இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மயங்க் 22 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

தொடர்ந்து களம் இறங்கிய கோலி, ஷ்ரேயஸ் மற்றும் கே.எல். ராகுல் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க 13.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. இதில் கோலியும், ஷ்ரேயஸும் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்தனர். 


தொடர்ந்து களம் இறங்கிய ஹர்திக் பாண்ட்யாவுடன் கூட்டு சேர்ந்த தவன் ஸ்டெடியாக விளையாடினார். இருவரும் 129 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 74 ரன்களில் தவன் வெளியேற பாண்ட்யாவும் 90ரன்களை குவித்து விக்கெட்டை இழந்தார். 

இருவரும் இந்தியாவுக்கு வெற்றி தேடி கொடுப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் விக்கெட்டை இழந்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதன்பின்னர் களம் இறங்கிய பேட்ஸ்மேன்கள் மேட்சை முடித்து கொடுக்கவே விளையாடினர். 


முடிவில் 50 ஓவர்களில் இந்தியா 308 ரன்களுக்கு 8 விக்கெட்டை  இழந்து தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியாவுக்காக சாம்பா மற்றும் ஹேசல்வுட் அற்புதமாக பந்து வீசி இருந்தனர். 

அதன் மூலம் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.