சவுதிக்கு கொடுக்கக் வேண்டிய கடனுக்குப் பதிலாக அமீரக ஆட்சியாளர்களை மகிழ்விக்க தொடங்கியுள்ளார், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் சமீபகாலமாக முட்டல் மோதல்கள் அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் இம்ரான் கானின் பேச்சுதான். சமீபத்தில் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையேயான உறவை இம்ரான் கடுமையாக விமர்சித்திருந்தார். இதையடுத்தே, இருதரப்பு உறவுகள் மோசமாகியுள்ளன.

image

பாகிஸ்தானின் செயல்களால் கடுப்பாகிய சவுதி அரேபியா அரசு, தான் பாகிஸ்தானுக்கு கொடுத்த 2 பில்லியன் டாலர் கடனைக் கேட்டு நச்சரிக்கத் தொடங்கியது. இவ்வளவு பெரிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு பாகிஸ்தானின் பொருளாதார நிலை இல்லை.

இதையடுத்து, தான் தற்போது சவூதி அரேபியாவை மகிழ்விக்கும் செயல்களில் பாகிஸ்தான் ஈடுபட தொடங்கியுள்ளது. சவுதி அரேபியாவுக்காக தனது சட்டங்களையும் பாகிஸ்தான் அரசு மீறத் தொடங்கியுள்ளது. ஆம், சட்ட திட்டங்களை மீறி, அரபு அமீரகத்துக்கு பாகிஸ்தானில் இருந்து சுமார் 150 கழுகுகளை ஏற்றுமதி செய்ய இருக்கிறார் இம்ரான் கான். இந்தத் தகவல்களை பாகிஸ்தான் செய்தி நிறுவனமான ‘டான்’ வெளியிட்டுள்ளது. இம்ரான் கொடுக்க உள்ள இந்த 150 கழுகுகளும் அரியவகை பறவைகள். இந்த நாட்டு அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களின்படி, இதுபோன்ற அரிய கழுகுகளை வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டு மிகப்பெரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அமீரகத்துக்கு கொடுக்க வேண்டிய கடனுக்காக, இந்த சட்டங்கள் தற்போது அரசாலே மீறப்பட்டுள்ளன.

image

துபாய் மன்னர், ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமுக்கு இந்தக் கழுகுகளை கொடுப்பதாக ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்தார் இம்ரான் கான். இப்போது அதன்படியே ஏற்றுமதி செய்துள்ளார். முதலில் ஏற்றுமதிக்கான உத்தரவை வெளிவிவகார அமைச்சகத்தால் பிறப்பிக்கப்பட்டு, கழுகுகள் ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அனுப்பியுள்ள இந்த அரிய வகை கழுகுகளை சவுதி அரேபியாவில் உள்ள வேட்டைக்காரர்கள் பயன்படுத்த இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் வைத்திருக்கும் வயதான பழைய கழுகுகளை மாற்றிவிட்டு வேட்டைக்கு இந்தப் புதிய கழுகுகளை பயன்படுத்துவார்கள் எனத் தெரிகிறது. சமீபகாலமாக பாகிஸ்தானின் நிதி நிலை மிகவும் மோசமாகி கொண்டிருக்கிறது. அண்மையில் இதேபோன்று ஒரு சூழ்நிலை ஏற்பட, அப்போது தங்கள் நாட்டின் இரு தீவுகளான புண்டல் மற்றும் புடோவை சீனாவுக்கு பாகிஸ்தான் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.