வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகத்தில் 10ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

image
இந்த பேரிடர் நேரத்தில் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி நடந்தால் செல்போன்களில் நெட்வொர்க் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். அதனால் அவசர கால உதவிக்கு தமிழக மற்றும் புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் கட்டுப்பாட்டு உதவி மையங்களின் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

image

புயல் நேரத்தில் அவசர கால உதவி தேவைப்படுபவர்கள் அச்சமின்றி பதட்டப்படாமல் அவசர கால உதவி எண்ணான ‘112’ -யை தொடர்பு கொள்ளலாம். இந்த ஒரே எண்ணை கொண்டு போலீஸ், தீயணைப்பு மற்றும் மருத்துவம் மாதிரியான அவசர கால உதவி எண்களை எளிதில் அணுகலாம்.
பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது பாதிப்படைந்தவர்களுக்கு உதவ விரும்புபவர்களும் 112-யை தொடர்பு கொண்டு விவரத்தை சொல்லலாம்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.