கைவினைப் பொருட்கள், இந்தியாவின் தொன்மையான கலாச்சார பாரம்பரியத்தின் சின்னமாகவும், வாழ்வாதாரத்திற்கான முக்கிய அம்சமாகவும் விளங்குகின்றன.  55 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கைவினைப் பொருட்களை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ளதன் வாயிலாக பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் முக்கிய  துறையாக இது விளங்குகிறது.

image

நாட்டு மக்கள் அனைவரும் இந்திய கைவினைப் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துமாறு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கூறியுள்ளதாவது :

கடந்த ஒன்பதாம் தேதி பிரதமர் விடுத்த வேண்டுகோளை அடுத்து, உள்நாட்டுத் துணிகள், கைவினைப் பொருட்களின் வர்த்தகத்தை ஊக்குவிக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்சிறு அகல் விளக்காக இருக்கட்டும்,  நாம் அன்றாடம் பயன்படுத்தும் துணி வகைகள், படுக்கை விரிப்புகள், திரைச்சீலைகளாக இருக்கட்டும், நமது அன்பிற்குரியவர்களுக்கான அன்பளிப்பாக இருக்கட்டும்.. இந்த தீபாவளியை முன்னிட்டு நாம்  வாங்கும் அனைத்துப் பொருட்களும்  நம்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களாக அமையட்டும்

இந்திய நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள், உள்நாட்டு மற்றும் சிறிய வணிகர்களிடமிருந்து நீங்கள் வாங்கும் பொருட்கள் குறித்து ட்விட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்வதுடன், #Local4Diwali என்ற ஹேஷ்டேகையும் பயன்படுத்தி தீபாவளி விற்பனையை ஊக்குவிக்கலாம். துணி வகைகள், கைவினைப் பொருட்கள், அல்லது தீபாவளிக்கு வாங்கும் பரிசுப்பொருட்களை  புகைப்படம் எடுத்து அதை விற்பனை செய்பவரையும் குறிப்பிட்டு  #Local4Diwali என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தவும். இதுபோன்ற சவாலான தருணங்களில் உங்களது ஆதரவினால் ஏராளமானோருக்கு பெரும் உதவியாக இருக்கும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.