அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் ஆனார் கமலா ஹாரிஸ்! 

கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கமலா ஹாரிஸை உலகமே உற்று நோக்கியது. காரணம், அவர், ஒரு பெண் என்பது மட்டுமல்ல. துணை அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்ட முதல் கறுப்பின பெண்.

 image

56 வயதான கமலா ஹாரிஸின் பூர்வீகம் நமது தமிழகம்தான். அவரது அப்பா ஜமைக்கா. அமெரிக்காவில் முக்கிய கட்சிகளான குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் இதுவரை வேட்பாளராக கறுப்பின பெண்ணை நிறுத்தியதில்லை. அதனால், இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கமலா ஹாரிஸின் தாய் ஷியாமலா கோபாலன் சென்னையை சேர்ந்தவர் என்பதால், அவரது உறவினர்கள் தற்போது சென்னையில் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர், துணை அதிபருக்கான தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளது உலகத்தையே உற்றுநோக்க வைத்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.