ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு சோதனையில் இருக்கும் கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசியானது இந்தியாவிற்கு அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்கு பிறகு கிடைக்கும் எனத் தெரியவந்திருக்கிறது.

உலக நாடுகள் கொரோனாத் தொற்றுக்கான மருந்தைக் கண்டறிவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும் இணைந்து கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசியை நோயாளிகளுக்கு செலுத்தி சோதனை செய்து வருகிறது. இந்தச் சோதனை முடிவுகள் இந்த வருட இறுதியில் வெளிவரும் எனத் தெரியவந்துள்ளது.

image

இது குறித்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை தலைமை ஆய்வாளர் ஆண்ட்ரூ பொல்லார்ட் கூறும்போது “ கொரோனாத் தடுப்பூசி சோதனை முடிவுகள் இந்த வருட இறுதிக்குள் வெளிவரும் என நம்புகிறேன். கிட்டத்தட்ட முடிவை நாங்கள் நெருங்கிவிட்டாலும் சோதனையானது இன்னும் முழுமையாக நிறைவுபெற வில்லை. கிறிஸ்துமஸ் விழாவிற்கு முன்னர் தடூப்பூசி நடைமுறைக்கு வருமா எனத் தெரியவில்லை. ஆனால் அதற்கான சிறு வாய்ப்பு இருப்பதாகவேத் தெரிகிறது.”என்று கூறியுள்ளார்.

இந்தச் சோதனை முடிவுகள் இங்கிலாந்தின் மருந்து கட்டுபாட்டு அதிகாரிகளால் மதிப்பாய்வு செய்யப்படும். அதன் பின்னர் தடுப்பூசியை நடைமுறையில் கொண்டுவருவதற்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்  மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்திற்கு அரசு அனுமதிக்கும்பட்சத்தில், அங்கு மருந்தானது இந்த வருடத்தின் இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது. அங்கு மருந்து நடைமுறையில் வரும்போது, அந்த மருந்தானது ஜனவரிக்கு பிற்கு இந்தியாவிற்கு கிடைக்கும் எனத் தெரிய வந்துள்ளது.

image

இது குறித்து முன்னதாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறியபோது “ இந்தியாவில் ஜனவரி மாதம் கொரோனாத் தடுப்பூசி சோதனையானது நிறைவுக்கு வந்து விடும். முதற்கட்டமாக 1000 நபர்களுக்கு இந்தத் தடுப்பூசியானது செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து இராண்டாம் கட்ட சோதனை நடத்தப்பட்டு, அந்த முடிவுகள் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படும்” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.