நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் பொல்லார்டு. 

image

14 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 259 ரன்களையும் இந்த சீசனில் எடுத்துள்ளார். இந்நிலையில் லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

அதில் ஹைதராபாத் அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நிலையில் ஆட்டத்திற்கு பிறகு இன்ஸ்ட்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் குழப்பமான போஸ்டை போட்டிருந்தார் பொல்லார்டு. 

image

“நண்பன் என சொல்லிக்கொண்டு எனது வீழ்ச்சியின் மீது ரகசியமாக குறிவைத்திருப்பவனை காட்டிலும் என்னை வெளிப்படையாக வெறுக்கிறேன் என சொல்கின்ற எதிரியே மேல்” என அதில் தெரிவித்துள்ளார் பொல்லார்டு. 

அவர் யாரை சொல்கிறார் என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர். 

 
 
 
View this post on Instagram

A post shared by Kieron Pollard (@kieron.pollard55) on

சிலர் ரோகித்தை தான் பொல்லார்டு மறைமுகமாக சொல்கிறார் எனவும் ரசிகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அவர் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடும் வெஸ்ட் இன்டீஸின் ஜேசன் ஹோல்டரை சொல்கிறார் எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளை மும்பை அணி டெல்லியுடன் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் விளையாட உள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.