வியாபாரச் சந்தையில் விற்கப்படும் போலியான உணவுப் பொருட்களை எவ்வாறு கண்டறிவது என்பது பற்றியும் பொருட்களை  பாதுகாப்பாக வாங்குவது பற்றியும் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் பார்க்கலாம்.

image

1. நீங்கள் ஆன்லைன் மூலம் உணவுப் பொருட்களை வாங்குவோராய் இருப்பின் முதலில் அத்தளத்தின் உண்மைத்தன்மையை கருத்தில் கொள்ள வேண்டும்.

2. ஆன்லைனில் அதிக சலுகைகளுடன் வெளியிடப்படும் விளம்பரத்தைக் கொண்டு தெரியாத தளத்தில் பொருட்களை வாங்குவதை முடிந்த வரையில் தவிர்க்கலாம்.

3. எங்கு எந்த பொருட்களை வாங்கினாலும் அதற்குரித்தான பில்லை அழுத்தம் கொடுத்து வாங்குதல் அவசியம். காரணம் உணவு பொருட்களில் ஏதேனும் பிரச்னை இருப்பின், அந்த பில்லை வைத்து நீங்கள் கேள்வி எழுப்பலாம்.

4. புதிதாக ஏதேனும் ஒரு ஆன்லைன் தளத்தில் நீங்கள் உணவுப் பொருட்களை வாங்க போகிறீர்கள் என்றால் அந்த ஆன்லைன் தளத்தின் உண்மைத் தன்மையை ஒன்றுக்கு இரு முறை ஆராய்தல் வேண்டும். காரணம் நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக உங்களுக்கு வேறு பொருட்கள் வந்தடைய வாய்ப்பு இருக்கிறது.

 

image

4. உணவுப் பொருளை வாங்கும்போது அதன் மீது ஒட்டப்பட்டுள்ள ஊட்டச்சத்து பட்டியலை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். காரணம் போலியான உணவுப் பொருட்களில் சில ஊட்டச்சத்துகளின் விவரங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அந்த ஊட்டச்சத்துக்கள் உண்மையான உணவுப் பொருளில் இடம் பெறாமல் இருக்கும்.

5.ஆகவே உணவுப் பொருளை வாங்கும் முன்னர், பொருள் குறித்தான ஊட்டச்சத்து பட்டியலை ஆராய்ந்து விட்டுச் செல்லுங்கள். குறிப்பிடப்பட்ட ஊட்டச்சத்து விவரங்களை விட அதிகமாகவோ அல்லது ஊட்டச்சத்துகள் இல்லாமல் இருந்தால் அந்த உணவுப் பொருள் போலியானது என்பதை நாம் கண்டறிந்து கொள்ளலாம். இந்த விவரங்களை நீங்கள் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள “Smart Consumer App’ல் தெரிந்து கொள்ளலாம்.

image

6. உணவு பொருளை வாங்கும் போது அதன் பேக்கேஜிங்கில் கவனம் செலுத்துவதும் மிக முக்கியமானது. போலியான நபர்கள் உண்மைப் பொருட்களுக்கு ஒத்த வடிவில் பொருட்களை பேக்கேஜ் செய்வார்கள். ஆனால் அவர்களால் அதை 100 சதவீதம் முறையாக செய்ய இயலாது. பொருட்களின் பேக்கேஜ் முறை, நிறம், பேக்கேஜ் செய்யப்பட்டிருக்கும் பாட்டிலின் வடிவம், பொருளின் வாசம் உள்ளிட்டவற்றைக் கொண்டு நீங்கள் போலியான உணவுப் பொருட்களை கண்டு கொள்ளலாம்.

7. உண்மையான உணவுப் பொருட்களில் பாதுகாப்புத் தன்மையை உறுதிசெய்ய ஹோலோகிராம், குயூ ஆர் கோடு ஸ்கேன், எஸ்.எம்.எஸ் மூலம் உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றிருக்கும்.

8. அதே போல பொருளை வாங்கும் போது அது உற்பத்தி செய்யப்பட்ட தேதி, அதற்கான கால நேரம் எவ்வளவு போன்ற விவரங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

 

courtesy:https://indianexpress.com/article/lifestyle/food-wine/simple-tips-how-to-identify-adulterated-fake-food-items-6724742

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.