பிரதமர் மோடி அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை, ‘காங்கிரஸ் இல்லாத பாரதம் அமைப்போம்’ என்பதே. இதற்கேற்பத்தான் அரசியல் வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. அஸ்ஸாம் ஆரம்பித்து கர்நாடகா வரை இன்று 12 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது பா.ஜ.க. இதுபோக, நான்கு மாநிலங்களில் பா.ஜ.க கூட்டணி அரசு அமைந்திருக்கிறது.

சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் ஆள்கிறது. மெஜாரிட்டியே கிடைக்காமல் போனாலும், மாநிலக் கட்சிகளை உடைத்தும், அரவணைத்தும் தனது ஆட்சி அதிகாரக் கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. அருணாச்சலப் பிரதேசத்தை அலேக்காகத் தூக்கியது இதற்குச் சரியான உதாரணம் (பார்க்க பெட்டிச் செய்தி). கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களிலெல்லாம் கிட்டத்தட்ட இதே பாணியில்தான் ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க.

தமிழகத்தில் பா.ஜ.க முன்னெடுக்கப்போகும் வியூகம், ‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’ மற்றும் ‘திராவிடம் இல்லாத தமிழகம்’தான். 1967-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆனால், இரண்டு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் தன் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இரண்டு திராவிடக் கட்சிகளில் ஒன்றை வீழ்த்திவிட்டால், காங்கிரஸைத் தமிழகத்தில் ஒடுக்கிவிடலாம் என்பது டெல்லி கணக்கு.

இது முதற்கட்டம்தான். வீழ்த்தப்படும் பலவீனமான திராவிடக் கட்சியின் இடத்தில் தன் இருப்பைக் கட்டமைத்துக்கொண்டு, மற்ற திராவிடக் கட்சிகளையும் பலமிழக்கச் செய்வது இரண்டாவது கட்டம். இதற்கான வேலையைத்தான் தமிழகத்தில் பா.ஜ.க ஆரம்பித்திருக்கிறது…

டெல்லி பா.ஜ.க ஆரம்பத்தில் ரஜினியைத்தான் நம்பியிருந்தது. தற்போது அந்த நம்பிக்கை சற்றே குறைந்தாலும், அவரையும் ஒரு ஆப்ஷனாக வைத்திருக்கிறது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. அவருடன் கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் காலமிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார். ஒருவேளை ரஜினி அரசியலுக்கு என்ட்ரி கொடுத்தால் அவருடன் கைகோப்பது, வரவில்லை யென்றால் அ.தி.மு.க-வுடன் கூட்டணியைத் தொடர்வது.

இதுதான் பா.ஜ.க போட்டிருக்கும் ரூட். இதன் வழியாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தவுடன் அ.தி.மு.க-வை காலி செய்துவிட்டு, அந்தக் கட்சியின் கட்டமைப்பை ஹைஜாக் செய்வது. 2031-ல் பா.ஜ.க ஆட்சி. இதுதான் தமிழகத்தில் பா.ஜ.க-வின் ‘பயங்கர’ திட்டமாக இருக்கிறது.

– தமிழகத்தில் அ.தி.மு.க தலைமை விரும்புகிறதோ, இல்லையோ அவர்களுடன் கட்டாயக் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு, அதிரடியாகச் சீட்டுப் பேரங்களையும் பா.ஜ.க தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை கூட்டணிக்கு அ.தி.மு.க மறுத்தால், ரெய்டு பயத்தைக் காட்டி அந்தக் கட்சியை உடைக்கவும் திட்டங்களைத் தயார் செய்திருக்கிறது பா.ஜ.க!

> அந்தத் திட்டங்களின் பின்புலத்துடன் முழுமையான கவர்ஸ்டோரியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க… https://bit.ly/34mNXW1 > கட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி! – இலையை நசுக்கும் தாமரை https://bit.ly/34mNXW1

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர… ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.