இறைச்சி மற்றும் ஐஸ்க்ரீம் கொண்டு வித்தியாசமான உணவு ஒன்றை தயாரித்திருக்கின்றனர் ரஷ்யாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

டீப் ஃப்ரை சாக்லேட் சிக்கன், ரெட் சாஸ் பாஸ்தா தோசை முதல் ஐஸ்க்ரீம் வடா பாவ் வரை வித்தியாச வித்தியாசமான சுவைகொண்ட சம்பந்தமே இல்லாத இரண்டு உணவுகளை ஒன்றாக்கி ஒரே உணவாகக் கொண்டுவந்தார்கள்.

சுவையான செர்ரி பழத்தை மோசமான கேக்கின்மீது வைப்பதுபோன்று ஒரு புது டிஷ்ஷை உருவாக்கியுள்ளனர் ரஷ்யாவின் மின்ஸ்க் இன்ஸ்டிடியூட் ஃபார் மீட் அண்ட் டைரியை(Minsk Institute for Meat and Dairy) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இறைச்சியுடன் ஐஸ்க்ரீம் சேர்த்து உருவாக்கியுள்ள இந்த உணவுக்கு ஐஸ் மீட் என்று பெயரிட்டுள்ளனர். இந்த உணவை முதன்முதலாக பெலக்ரோவில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற கண்காட்சியில் பொதுமக்கள் சுவைக்க வைத்திருந்தனர்.

மேலும் யுடியூபில் இந்த ஐஸ் மீட் தயார் செய்வது குறித்த முழு வீடியோவையும் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில் ஒரு ஆராய்ச்சியாளர் தேவையான பொருட்களுடன் இறைச்சியையும் ஐஸ்க்ரீம் மெஷினுக்குள் போடுகிறார். சிறிதுநேரத்திற்குப் பிறகு சாதாரண ஐஸ்க்ரீமைவிட சற்று கெட்டியான மீட் ஐஸ்க்ரீம் வெளிவருகிறது.

image

image

இதுகுறித்து மூத்த ஆராய்ச்சியாளர் ஐரினா கால்டோவிச், ‘’இந்த ஐஸ்க்ரீம் ஆரோக்யமாக புத்துணர்ச்சியூட்டும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், சிற்றுண்டிக்கு ஏற்றது’’ எனக் கூறியுள்ளார்.

ட்ரம்புக்கு சீனாவில் வங்கிக் கணக்கு? வெளியான தகவல் 

இந்த ஐஸ்க்ரீமில் புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளது. இதில் சர்க்கரை சேர்ப்பதில்லை என்பதால் நீரிழிவு நோயாளிகளும் உண்ணலாம். ஆனால், பலர் பாராட்டினாலும் சில நெட்டிசன்கள் இந்த உணவுக்கு பெரிதாக வரவேற்பு கொடுக்கவில்லை என்பதை ’’இந்த ஐஸ்க்ரீம் பூனைக்கா அல்லது மனிதர்களுக்கா?’’ என்பது போன்ற அவர்களின் கருத்துகளிலிருந்தே தெரிந்துகொள்ள முடிகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.