சென்னையில் மூன்று பேரில் ஒருவருக்கு, அவர்களுடைய உடலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடி உருவாகியிருப்பது சென்னை கார்ப்பரேஷன் நடத்திய செரோ சர்வேயில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா

செரோ சர்வே என்பது என்ன?

செரோ பரிசோதனை ஸ்டிக்கில், 10 வயதுக்கு மேற்பட்டவர்களின் ரத்த மாதிரியை வைத்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு கொரோனா வந்து சென்றிருந்தால் அவர்களுடைய உடலில் ஆன்டிபாடி உருவாகியிருக்கிறதா என்பதைக் கண்டறிந்து விடலாம்.

Also Read: மதுரை: ஏழு மாதங்கள்… 5,511 இறப்புகள் – மறைக்கப்படும் கொரோனா மரணங்கள்?!

சென்னையில், தற்போது கொரோனா வைரஸ் பரவல் எப்படியிருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்கான சர்வே ஒன்றை, சென்னை கார்ப்பரேஷன் சமீபத்தில் செய்தது. அதற்காக, தெருக்களில் நடந்து செல்பவர்களுக்கு, மக்கள் தொகை அதிகமாக இருக்கிற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு என்று 10 வயதுக்கு மேற்பட்டவர்களில் 6,389 பேருக்கு செரோ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 2,062 பேரின் உடலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடி உருவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, 32.3 சதவிகித்தினருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. கடந்த ஜூலையில் செரோ சர்வே எடுக்கப்பட்டபோது, ஐந்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், இப்போது மூன்றில் ஒருவருக்கு கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடி உருவாகியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

கொரோனா

இந்த நிலையில், விழாக்காலத்தை முன்னிட்டு தமிழகம் முழுக்க இருக்கிற உணவகங்கள், அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், தேநீர் கடைகள் ஆகியவை இரவு 10 மணி வரைக்கும் திறந்திருக்கலாம் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இது பொருளாதார சரிவை சரி செய்யலாம். ஆனால், கொரோனா பரவலைச் சுலபமாக்கிவிடும் என்பதே உண்மை.

Also Read: பொது இடங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன? #VikatanPollResults

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.