பாம்பன் கடலில் இரட்டை வழி தளத்துடன் அமையும் புதிய ரயில் பாலத்தில், கப்பல் செல்லும் கால்வாய் பகுதியில் இருபுறமும் தூண்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

image

ராமேஸ்வரம் தீவை தமிழகத்துடன் இணைப்பதில் பாம்பன் பாலம் முக்கிய பங்காற்றுகிறது. பாம்பன் கடலில் உள்ள ரயில்பாதை அமைக்கப்பட்டு 100 ஆண்டுகளை கடந்து விட்டது. இதையடுத்து ரூபாய் 250 கோடியில் செலவில் மின்சார ரயில்களை இயக்கும் வகையிலான இரட்டை வழித்தடத்துடன் கூடிய புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவக்கப்பட்டது.

தற்போதுள்ள ரயில் பாலத்திற்கு அருகிலேயே கட்டப்பட்டுவரும் பாலத்தின் பணிகள் கொரோனா காரணங்களால் சில மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. தளர்வுகளுக்கு பிறகு மீண்டும் பணிகள் துவங்கப்பட்டு தங்கு தடையின்றி நடந்து வருகிறது. கட்டுமானப் பொருட்களை அறையிலிருந்து படகுகளில் கொண்டு செல்வதற்காக பாம்பன் வடக்கு கடற்கரைப் பகுதியில் தற்காலிக படகு நிறுத்தும் தளம் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

 image

இங்கிருந்து அனைத்து பொருட்களும் பணி நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பொருட்களை எடுத்துச் செல்லும் பபடகுகள் கடல் நீரோட்டம் மற்றும் காற்றால் கட்டுப்பாட்டை இழந்து தற்போது உள்ள ரயில் பாலத்தின் மீது மோதாமல் இருக்க கடற்கரையில் இருந்து கடலுக்குள் பணிகள் நடைபெறும் இடம் வரை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

பாம்பன் கடலில் தற்போது கப்பல் செல்லும் கால்வாய் பகுதியில் வெர்டிக்கல் லிப்ட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் தூண்கள் அமைக்கும் பணி முடிந்து விட்டதால் இருபுறமும் விரைவாக மற்ற தூண்களை அமைத்துவிடலாம் என்பதால் கால்வாய் பகுதியில் தூண்கள் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

image

வரும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து டிசம்பர் முடிய வடகிழக்கு பருவமழை காலம் துவங்கிவிடும் என்பதால், பாம்பன் கடலில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பும் இருக்கும். இதனால் பாம்பன் கால்வாய் பகுதியில் தூண்கள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க ஊழியர்கள் திட்டமிட்டு தீவிரமாக கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.