ஓய்வுக்காலத் தேவைக்கான பணத்தைச் சேர்க்க பல வழிகள் உண்டு. அதில் முக்கியமானதுதான் நேஷனல் பென்ஷன் ஸ்கீம் என்று சொல்லப்படும் என்.பி.எஸ் (NPS). மத்திய அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களுக்காக 2004 ஜனவரியில் நடைமுறைக்குக் கொண்டுவந்த இந்தத் திட்டத்தை, இந்தியக் குடிமக்கள் அனைவரும் தமது முதுமைக் காலத்தில் ஓய்வூதியம் பெற வேண்டும் என்ற பரந்த நோக்கத்துடன் குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான ஓய்வூதியத் திட்டமாக மே 2009 முதல் விரிவாக்கம் செய்தது. 18 முதல் 65 வயது வரையான இந்தியக் குடிமக்கள் இதில் சேரலாம்.

இன்றைய தேதியில் என்.பி.எஸ்ஸின் ஒட்டுமொத்த உறுப்பினர் எண்ணிக்கை சுமார் 1.4 கோடி. ஓய்வூதிய நிதியத்தின் மொத்தத் தொகை சுமார் ஐந்து லட்சம் கோடி. இந்தத் திட்டத்தில் சேருபவர்கள் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகிறது.

என்றாலும், என்.பி.எஸ்ஸில் பணத்தைச் சேமித்தால், ஓய்வுக்காலத்தில்தானே பலன் கிடைக்கும். அவசரத் தேவைக்கு பணத்துக்கு என்ன செய்வது என்ற சந்தேகம் மக்கள் மனதில் இருக்கவே செய்கிறது. ஆனால், என்.பி.எஸ் திட்டத்தில் மிகப்பெரிய சிறப்பம்சமே, இந்தத் திட்டத்தில் ஓய்வுக் காலத்துக்கு இடைப்பட்ட காலத்தில் நீங்கள் விரும்பினால் பணம் பெறலாம் என்பதே.

ஓய்வுக்குப் பின் (மாதிரி படம்)

அதாவது, என்.பி.எஸ் இரண்டு பிரிவாக உள்ளது. என்.பி.எஸ் கணக்கு I மற்றும் என்.பி.எஸ் கணக்கு II என்பதுதான் அந்த இரண்டு வகை கணக்குப் பிரிவுகள். இந்த இரண்டு வகை என்.பி.எஸ் கணக்குகளில் தேவைக்கேற்ப பணம் பெறக்கூடியது கணக்கு II மூலம்தான். ஆனால், என்.பி.எஸ் கணக்கு I-ல் சந்தாதாரராக இருந்தால்தான் கணக்கு II–ஐ தொடங்க முடியும். எனவே, ஓய்வுக்கால பணத் தேவைக்கு கணக்கு I-யும், உடனடித் தேவைக்கு கணக்கு II-யும் தொடங்கிப் பராமரிப்பது அவசியம்.

என்.பி.எஸ் கணக்கைத் தொடங்குவது எப்படி?

என்.பி.எஸ் கணக்கு II-ஐ ஆன்லைனில் தொடங்க நினைப்பவர்கள் https//enps.nsdl.com என்ற வலைதளத்தை அணுக வேண்டும். இதில் ‘Tier II Activation’ என்பதை க்ளிக் செய்தால், அதில்

1. PRAN Number (நிரந்தர ஓய்வுக்காலக் கணக்கு எண்)

2. Date of Birth (பிறந்த நாள்)

3. PAN (நிரந்தரக் கணக்கு எண்) ஆகிய தகவல்களைத் தந்து ‘Verify PRAN’ என்பதை க்ளிக் செய்தால், ஓ.டி.பி கிடைக்கும். ஓ.டி.பி-யை அதற்கான இடத்தில் பதிவு செய்து, வங்கி விவரங்களைப் பூர்த்தி செய்து ‘Validate AADHAAR’ என்பதை க்ளிக் செய்தால், ஒப்புகை (Acknowledgement) கிடைக்கும். இதை ஓ.கே செய்ய வேண்டும்.

பிறகு, பி.எஃப்.எம் (Pension Fund Manager) தேர்வு செய்து, முதலீட்டு முறை ஆக்டிவ் (Active) அல்லது ஆட்டோ (Auto) என்பதையும் தேர்வு செய்து ‘Save and Proceed’-ஐ க்ளிக் செய்த பின் நியமனதாரர் விவரம் பூர்த்தி செய்து மீண்டும் `Save and Proceed’ க்ளிக் செய்து, பான் கார்டு ஸ்கேன் செய்த காப்பியையும் மற்றும் ரத்து செய்த காசோலையையும் பதிவேற்றவும்.

இந்த ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து முடிந்ததும் `Upload’-ஐ க்ளிக் செய்தபின், Tier II NPS கணக்கில் 1,000 ரூபாய் செலுத்தி கணக்கைத் தொடங்கலாம். இதற்கான ரசீது கிடைக்கும். ஆதார் எண்ணைப் பயன்படுத்தி மின்னணு கையொப்பம் (e-sign) செய்ய வேண்டும். இப்போது மீண்டும் ஓ.டி.பி வரும்.

இந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, கையொப்பமிட்டு பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைப்பது அவசியம். TRADE WORLD, 4th Floor, ‘A’ Wing, Kamala Mills Compound, Lower Parel, Mumbai – 400013.

– என்.பி.எஸ் கணக்கு I மற்றும் என்.பி.எஸ் கணக்கு II முழுமையாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியவற்றை தெளிவாக அடுக்கும் கைடன்ஸ் கட்டுரையை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க – https://bit.ly/3lvft9w

ஓய்வுக்காலத்துக்கும் உடனடித் தேவைக்கும் பணம் தரும் என்.பி.எஸ்! – எல்லோரும் சேர்வது எளிது! https://bit.ly/3lvft9w

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர… ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.