அபுதாபியில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பத்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா.

image

இந்த ஆட்டத்தின் டாப் 10 தருணங்கள்…

1.தனி ஒருவனாக மிரட்டிய ராகுல் திரிபாதி

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த கொல்கத்தா அணியின் ஒப்பனர்களாக இந்த ஆட்டத்திற்கு முன்னர் வரை சுனில் நரைனும், சுப்மன் கில்லும் ஒப்பனர்களாக இறங்கி வந்தனர்.

ஒரு மாற்றத்திற்காக ராகுல் திரிபாதியும், சுப்மன் கில்லும் ஒப்பனர்களாக இறங்கினர். அதில் சுப்மன் கில் 11 ரன்களில் அவுட்டாக தனி ஒருவனாக ஆட்டத்தின் 17வது ஓவர் வரை போராடி கொல்கத்தா டீசெண்டான ஸ்கோரை எட்ட உதவினார் திரிபாதி.

51 பந்துகளில் 81 ரன்களை குவித்தார் திரிபாதி. அதில் 8 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும்.

2.சொதப்பிய கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்

திரிபாதி சென்னை பவுலர்கள் பந்து வீச்சை அடித்து நொறுக்க மறுபக்கம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தனர் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்.

கில், ராணா, மோர்கன், ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் என கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் கிரீஸுக்கு வருவதும் பெவிலியனுக்கு திரும்புவதுமாக பிசியாக இருந்தனர்.

3.மூன்று விக்கெட்டுகளை காலி செய்த BIRTHDAY பாய் பிராவோ

சென்னை அணியின் ஆல் ரவுண்டர் பிராவோ முதல் இன்னிங்ஸின் இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

அசத்தலாக விளாயாடிக் கொண்டிருந்த திரிபாதியை போட்டுத் தள்ளியிருந்தார் பிராவோ. கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வெறும் ஐந்து ரன்களை மட்டுமே வீட்டுக் கொடுத்திருந்தார் பிராவோ.

image

4.சுழலில் அசத்திய கரண் ஷர்மா

பியூஷ் சாவ்லாவுக்கு மாற்றாக சென்னை அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்ற கரண் ஷர்மா தனது பணியை மிடில் ஓவரில் சிறப்பாக செய்தார்.

4 ஓவர்கள் வீசி 25 ரன்களை விட்டுக்கொடுத்த கரண் ஷர்மா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ராணா மற்றும் சுனில் நரைனை தனது பந்து வீச்சில் அவுட்டாக்கியிருந்தார்.

5.கேட்ச் பிடித்து மாஸ் காட்டிய தோனி

விக்கெட் கீப்பராக 4 கேட்ச்களை பிடித்து இந்த ஆட்டத்தில் மாஸ் காட்டினார் தோனி.

கில், மோர்கன், ரஸ்ஸல், ஷிவம் மாவி என நான்கு பேரை கேட்ச் பிடித்து அவுட் செய்திருந்தார். இதில் ஷிவம் மாவியின் பேட்டில் பட்டு எட்ஜான பந்தை தோனி டைவ் அடித்து பிடித்தது அவரது ஃபிட்னஸ் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ரகம்.

6.அரை சதம் அடித்த வாட்சன்

ஃபார்முக்கு திரும்பியுள்ள ஷேன் வாட்சன் பேட்டிங்கில் சென்னை அணிக்காக நின்று விளையாடினார். 40 பந்துகளில் 50 ரன்களை குவித்திருந்தார். இதன் மூலம் பேக் டூ பேக் அரை சதம் கடந்திருந்தார் வாட்சன். அதில் 6 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும்.

7.வாட்சன் VS நரைன்

சென்னை இந்த ஆட்டத்தில் சுலபமாக வெல்லும் என எதிர்நோக்கிய சமயத்தில் பந்து வீச வந்தார் சுனில் நரைன். அவரது பந்து வீச்சில் ஐந்து முறை அவுட்டாகியுள்ள வாட்சன் இந்த ஆட்டத்திலும் அவுட்டாகி வெளியேறினார். முதல் பத்து ஓவர்கள் வரை பந்துவீசாத நரைன் வாட்சன் விக்கெட்டை வீழ்த்தியதும் ஆட்டத்தின் கண்ட்ரோல் மெல்லமாக கொல்கத்தாவின் பக்கமாக திரும்பியது.

8.மிடில் ஆர்டரில் சொதப்பிய சென்னை

சென்னையின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் டூப்ளஸி தவிர வாட்சனும், ராயுடுவும் சிறப்பான ஆட்டத்தை விளையாடியிருந்தனர். பத்து ஓவர் முடிவில் 90 ரன்கள் குவித்திருந்த சென்னை அதற்கடுத்த பத்து ஓவரில் வெறும் 67 ரன்களை மட்டுமே எடுத்தது. தோனி, சாம் கர்ரன் மற்றும் கேதார் ஜாதவ் ஏமாற்றியதே சென்னையின் மிடில் ஆர்டர் சொதப்ப காரணம்.

9.தோனி VS வருண் சக்கரவர்த்தி

தோனி தனது ஸ்டைலில் இறுதி வரை விளையாடி வென்று  கொடுப்பர் என எதிர்பார்த்த நிலையில் கொல்கத்தாவுக்காக விளையாடும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியின் சுழலில் சிக்கி போல்டாகி வெளியேறினார். 97 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த அந்த பந்தை ஸ்லாக் ஸ்வீப் ஆட முயன்ற தோனி மிஸ் செய்ததும் பந்து மிடில் ஸ்டம்பை பதம் பார்த்தது.

10.ரன் சேர்க்க தடுமாறும் ஜாதவ்

கேதார் ஜாதவ் இந்த சீஸனில் அதிக ரன்களை குவிக்காத நிலையில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருவது ஏன் என சென்னை ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆல் ரவுண்டர் பிராவோ இருக்கும் போது ஜாதவ் ஏன் அவருக்கு முன்னதாக பேட் செய்ய வேண்டுமெனவும் கேள்வி எழுப்புகின்றனர். இந்த ஆட்டத்தில் 12 பந்துகளை விளையாடிய ஜாதவ் வெறும் 7 ரன்களை மடுட்மே குவித்திருந்தார். சென்னை வெல்ல வேண்டிய ஆட்டத்தை கொல்கத்தாவின் வசம் ஒப்படைத்தும் அவர் தான்.

அதே நேரத்தில் உலகின் தலைசிறந்த ஃபீல்டர்களான ஜடேஜாவும், டூப்ளசியும் கூட்டு சேர்ந்து  அற்புதமாக ஒரு கேட்சை பிடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ஜெயிக்க வேண்டிய ஆட்டத்தை அப்பட்டமாக சென்னை இழந்ததை எண்ணி ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.