புதுக்கோட்டையில் தூய தங்கத்தால் 2 கிலோ 851 கிராம் 26 மில்லி எடையில் மிகப்பெரிய ஒட்டியானம் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நகர் கீழ ராஜவீதியில் உள்ள ஸ்ரீ புவனேஸ்வரி தங்கமாளிகையில் 40 வருட வணிகத் தனித் தன்மையை வெளிப்படுத்தும் விதத்தில் உலக சாதனை முயற்சியாக 2 கிலோ 851 கிராம் 260 மில்லி கிராம் எடையில் தூய தங்கத்தில் பிஐஎஸ் ஹால்மார்க் தரத்துடன் 8 மாத காலமாக ஒட்டியானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

image

 உலகின் மிகப்பெரிய தங்கத்தாலான ஒட்டியானத்தை இன்று ஸ்ரீ புவனேஸ்வரி தங்க மாளிகையில், எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட 3 உலக சாதனை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று ஒட்டியானத்தை நேரில் களஆய்வு செய்தனர்,

 

image

இந்த களஆய்வில் தங்கத்தாலான ஒட்டியானம் 104 சென்டிமீட்டர் நீளத்திலும் 22.5 சென்டிமீட்டர் அகலத்திலும் 2 கிலோ 851 கிராம் 260 மில்லி கிராம் எடையிலும் இருந்ததையடுத்து உலகின் மிகப்பெரிய ஒட்டியானம் என்று மூன்று உலக சாதனை நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை ஸ்ரீ புவனேஸ்வரி தங்க மாளிகையின் உரிமையாளர் நடராஜன் மற்றும் யோகநாதன் விஜய் ஸ்ரீநாத் உள்ளிட்டோரிடம் வழங்கப்பட்டது. 

image

மேலும் தங்க ஒட்டியானத்தை ஒருவார காலத்திற்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்க உள்ளதாக அந்த நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உலக சாதனை படைத்த ஸ்ரீ புவனேஸ்வரி தங்க மாளிகை உரிமையாளர்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.