உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு இன்று முதல் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படவுள்ளது.

1901ஆம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969ஆம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் நோபல் பரிசுக்கான போட்டி பட்டியலில் உள்ளனர்.

‘நாங்க திரும்ப வந்துட்டோம்னு சொல்லு’ : சி.எஸ்.கே வெற்றியில் டாப் 10 தருணங்கள் 

இவர்களில் தகுதியானவர்கள் திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட உள்ளனர். மருத்துவத்துக்கான நோபல் பரிசு 5ஆம் தேதியும் இயற்பியல் துறைக்கான விருது 6 ஆம் தேதியும், வேதியியலுக்கு 7 ஆம் தேதியும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு 8 ஆம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன. அமைதிக்கான நோபல் பரிசு 9 ஆம் தேதியும், அக்டோபர் 10 ஆம் தேதியன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படவுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.