பிரதமர் நரேந்திர மோடி கடந்த 5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு பயணம் செய்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக மீண்டும் ஆட்சியைப் தக்கவைத்தது. அதிலிருந்தே பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை செய்துவருகிறார். தொழில் முதலீடுகளை ஈர்க்கிறார் என்று பாஜக தரப்பில் சொல்லப்பட்டாலும், அவரின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கான செலவுகள் பொதுமக்களின் வரிப் பணத்திலிருந்து செய்யப்படுகிறது என்று எதிர்கட்சிகள் விமர்சனங்கள் வைத்து வருகின்றன.

image

முரளிதரன்

இந்நிலையில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவுகளுகளுக்காக இதுவரை 517.8 கோடி ரூபாய்  செலவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

image

”பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் உலக நாடுகளுடனான பிரச்சனைகள், தொழில்துறை, வர்த்தகம், தொழில்நுட்பம், வெண்வெளி போன்றத் துறைகளில் வளர்ச்சியை கண்டுள்ளன. மற்ற நாடுகளுடனான உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே…சிறுமி பந்துடன் விளையாடுவதை ஆச்சர்யத்தோடு பார்க்கும் பூனைகள்: வைரல் வீடியோ

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.