அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கொடிய விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் அமைந்துள்ளது வெள்ளை மாளிகை. அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் என்பதால்  வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும்.

இந்நிலையில் வெள்ளை மாளிகைக்கு வந்த சந்தேகத்திற்கிடமான கடிதம் ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். கனடாவிலிருந்து அனுப்பப்பட்டதாக முகவரியிட்ட அந்த கடிதத்தில், ரிசின் என்ற கொடிய விஷம் தடவப்பட்டிருப்பதை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்.

image

அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், ட்ரம்பை குறிவைத்து கடிதம் அனுப்பப்பட்டதா? என்பது குறித்து அமெரிக்காவின் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.  

வெள்ளை மாளிகைக்கு இது போன்ற நஞ்சு பொருட்கள் அடங்கிய கடிதங்கள் அனுப்பப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே, கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவிற்கு நஞ்சுப்பொருள் அடங்கிய கடிதம் அனுப்பப்பட்டது. கடிதம் அனுப்பிய நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Courtesy: https://www.bbc.com/news/world-us-canada-54221893

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.